Don't Miss!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- News
களம் இறங்கிய காங்கிரஸ்..ஆதரவா? எதிர்த்து போட்டியா? மநீம நிர்வாகிகளுடன் இன்று கமல் இறுதி ஆலோசனை
- Automobiles
கார்களுக்கு பதிலா இந்த ஆட்டோக்களையே வாங்கிடலாம் போல... விலையோ கம்மி, வசதியோ மிக அதிகம்!
- Lifestyle
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
உயரமான நடிகையின் கட்டுப்பாட்டில் இருந்த வாரிசு நடிகர்..சீக்ரெட்டா பிரச்சனையை தீர்த்த அப்பா!
சென்னை : உயரமான நடிகையின் கட்டுப்பாட்டில் இருந்த வாரிசு நடிகரின் பிரச்சனையில் அவருடைய அப்பா தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார்.
காதல் எப்படி வரும், ஏன் வரும் என்று சொல்ல முடியாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காதல் வரலாம். அதுவும் சினிமாவில் எப்போ வேண்டுமானாலும் வரலாம்.
நடிகர் நடிகைகளுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட்டாகி விட்டால், இருவருக்கும் இடையே காதல் தீ சும்மா பக்குனு பத்திக்கும். அப்படி உயரமான நடிகையின் அழகில் மயங்கி காதலில் விழுந்துள்ளார் வாரிசு நடிகர் ஒருவர்.
தீ தளபதி பாடல் காப்பியா?..வசமாய் சிக்கிய 'வாரிசு'..தமனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

இரண்டு மொழி படங்களிலும்
தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அந்த உயரமான நடிகைக்கு தமிழில் பெரிதாக வரவேற்பு இல்லை என்பதால், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல கோலிவுட் மற்றும் டோலிவுட் என இரண்டு மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். இதையடுத்து, பல தோல்வி படங்களுக்கு பிறகு உயரமான நடிகைக்கு பெயர் சொல்லும் அளவுக்கு படவாய்ப்புகள் வந்தன.

வாரிசு நடிகருடன் ஜோடி
விடாது முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல பல தோல்வி படங்களுக்கு பிறகு உயரமான நடிகை நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்த ஒரு சில படங்கள் வெற்றி பெற்றதால், முன்னணி நடிகை என பெயர் எடுத்துவிட்டார். இந்த நேரத்தில் வாரிசு நடிகருடன் ஜோடி போடும் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரியும் சும்மா பக்காவாக அமைந்து படம் வசூலையும் வாரிக்குவித்தது.

நடிகை மீது க்ரஷ்
இதையடுத்து,வாரிசு நடிகருக்கு உயரமான நடிகை மீது ஒரு க்ரஷ் ஏற்பட்டதை அடுத்து, தனது அடுத்த படத்திலும், அந்த நடிகையே இருக்க வேண்டும் என் தயாரிப்பாளரிடம் அன்பு வேண்டுகோள்வைத்துள்ளார். இதையடுத்து, அந்த படத்திலும் இருவரும் ஜோடி போட்டி நடிக்க படம் பட்டையை கிளப்பி வசூலை வாரிக்குவித்தது.

சீக்ரெட் பேச்சுவார்த்தை
அதன் பின் வாரிசு நடிகர் பற்றியும் உயரமான நடிகை பற்றியும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டன. இந்த வதந்தி வாரிசு நடிகரின் அப்பாவுக்கு தெரியவர, வாரிசு நடிகரை சீக்ரெட்டாக அழைத்து குடும்ப பாரம்பரியதை சுட்டிக்காட்டி பிரச்சனையை பேசி உயரமான நடிகையின் நட்பை துண்டித்துள்ளார். அதன் பின் சில மாதங்களிலேயே அந்த நடிகருக்கு திருமணத்தையும் செய்து வைத்துள்ளார்.

இன்னும் திருமணமாகவில்லை
இப்போது அந்த நடிகர் குழந்தை குட்டி என குடும்பத்தை பொறுப்பாக கவனித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல், அந்த வாரிசு நடிகர் டாப் நடிகர்களில் பட்டியலில் இடம்பிடித்து அடுத்தடுத்து ஹிட் படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், அந்த உயரமான நடிகை திருமணம் செய்து கொண்டால் மார்க்கெட் போய்விடும் என இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல், ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.