எல்லை மீறிய இரண்டாவது காதலன்.. சலித்துப் போனதும் கிரேட் எஸ்கேப்.. காதல் வேண்டாம்னு முடிவெடுத்த நடிகை

By Staff

சென்னை: இந்த நடிகை வடக்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைதான். தமிழில் நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருந்தார். இவருக்கு என ஒரு அடையாளம் உருவான பின்னர் கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். அதுவும் நடிகை கிளாமரில் இப்படி இறங்கு குத்துவார் என யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு வேற லெவலில் கலக்கினார். இப்படி இருக்கும்போதுதான் இவருக்கு வாரிசு நடிகருடன் காதல் ஏற்பட்டது.

இந்த காதல் திருமணத்தில் முடியும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், வாரிசு நடிகரின் அப்பாவோ, பூமர் மாதிரி பல விஷயங்களைப் பேசி நடிகையை கழட்டி விடச் சொல்லி உள்ளார். இதனால் நடிகரும் வேறு வழி இல்லாமல் நடிகையை கழட்டி விட்டுவிட்டு, தனது பெற்றோர்கள் சொன்ன பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இந்த காதல் பிரிவுக்குப் பின்னர் நடிகை தமிழில் இருந்து கிட்டத்தட்ட முழுமையாக விலகினார். அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தவருக்கு கொரோனாவுக்குப் பின்னர், இந்தியிலும் வாய்ப்புகள் கொட்ட ஆரம்பித்தன.

Cinema Gossip Actress Who Decided To No Love No Berakup No Pain after Scond Love was Breakup

எல்லை மீறிய காதலன்: இந்திக்குப் போன பின்னர் தான் நடிகர் ஒருவருடன் மீண்டும் காதல் ஏற்பட்டுள்ளது. நடிகையும் நடிகரும் இணைந்து நடித்த சில படங்களும் வெப் சீரீஸும் வேற லெவலில் ஹிட் அடித்தது. அதுவும் இவர்களுக்கு இடையிலான நெருக்கமான காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்படியான நிலையில் நடிகரும் நடிகையும் அடிக்கடி மீட்டிங்கைப் போட்டுள்ளார்கள். இருவரும் வெளிநாடுகளுக்கு செல்வது, காதலை வளர்க்க தனிமையில் சந்தித்துக் கொள்வது என செம ஜாலியாக இருந்துள்ளார்கள். இருவருக்கும் இடையில் எல்லாமே முடிந்துவிட்டது என்று கூட கூறுகிறார்கள். இப்படியான நிலையில் நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் நடிகருக்கு சலிப்பை ஏற்படுத்த, கொஞ்சம் கொஞ்சமாக நடிகையை கழட்டி விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய் விட்டார் நடிகர்.

நடிகை எடுத்த முடிவு: ஆனால் ஏற்கனவே முதல் காதல் ஏற்படுத்திய வலி, இரண்டாவது காதலில் தன்னையே கொடுத்த நடிகை இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல் செம அப்செட்டாக இருக்கிறாராம். திருமணத்தில் இந்த காதல் முடியும் என பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இவர்களுக்கு இடையிலான காதல் முறிந்தது பலருக்குமே சோகம் தான். இப்படியான நிலையில் நடிகை ரொம்பவும் தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்துள்ளாராம். அதாவது, இனிமேல் காதலே வேண்டாம், கல்யாணமும் தன்னை நன்றாக புரிந்து கொள்கிற தோழமை உணர்வுடன் இருப்பவரை சந்தித்தால் திருமணம் செய்து கொள்ளலாம் இல்லை என்றால் வேண்டவே வேண்டாம். இனிமேல் பிரேக் -அப் என்ற வார்த்தையே தனது வாழ்க்கையில் இருக்க கூடாது என எண்ணுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X