அரசியல்வாதியிடம் அனுசரித்து போக சொன்ன மாமனார்.. கணவனின் காதிலே ஒன்னு விட்ட நடிகை!

By Staff

சென்னை: கொரோனா காலத்திற்கு முன்னர் வரை தென்னிந்திய நடிகையாக இருந்த இந்த நடிகை, அதன் பின்னர் பான் இந்தியா நடிகையாக மாறிவிட்டார். இவர் தமிழ் சினிமாவில் இருந்து தனது கெரியரைத் தொடங்கி இருந்தாலும், ஏழு கொண்டல வாடா நிலைகொண்டுள்ள அக்கட தேசத்தில் அதிரடியாக வளர்ந்தார். அங்கு முன்னணி நடிகையாகவும் மாறினார். சினிமா உலகில் கலக்கிக் கொண்டு இருந்த நடிகையை அவரது திருமண வாழ்க்கை மொத்தமாக மாற்றிவிட்டது.

இந்த நடிகை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். நடிப்பு, ரொமான்ஸ், நடனம் என நடிகை தனது பிளஸ் ஏரியாக்களில் ஸ்கோர் செய்து வந்தார். மின்னல் வேகத்தில் ஆடக்கூடிய நடிகர்களுடனுமே போட்டி போட்டு ஆடினார். இவரைப் பொறுத்தவரை தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நடிக்க கூடியவர்.

இப்படியான நிலையில் நடிகை அக்கட தேசத்திலேயே ஒரு வாரிசு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலும் ஆனார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்க வேண்டாம் என கணவரின் வீட்டில் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகையோ, நான் சினிமாவில் நடித்ததால் தான், என்னை உனக்கு தெரிந்து உள்ளது. இதுதான் உன்னையும் என்னையும் திருமண உறவில் கொண்டு வந்து சேர்த்துள்ளது. அது மட்டும் இல்லாமல் நடிப்பது என்பது எனது ஆம்பிஷன் எனக் கூறிவிட்டு தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.

Cinema Gossip Actress Who Divorce For Her Husband Family Gives Lots Of Srtuggles

அரசியல்வாதி: இந்த நிலையில், நடிகரின் குடும்பத்திற்கு அரசியல்வாதி தரப்பில் இருந்து பிரச்னை வந்துள்ளது. பிரச்னையை முடிக்க வேண்டும் என்றால், மருமகள் நடிகை தன்னை தனிமையில் சந்திக்க வேண்டும் எனக் கூறினாராம். இதை எப்படியோ நடிகையிடம் வேறு ஒருவர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார் நடிகரின் தந்தை. தனது மாமனார் தான் இந்த வேலையைப் பார்த்துள்ளார் எனத் தெரிந்து கொண்ட நடிகை, தனது கணவரிடம் இதை முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல், ஒரு கட்டத்தில் இது கை கலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது. எப்படியோ இந்த பிரச்னையை நடிகரின் குடும்பம் சமாளித்துள்ளார்கள்.

விவாகரத்துக்கு காரணம்: அதன் பின்னர், நடிகையை குழந்தை பெற்றுக் கொடுக்கச் சொல்லி உள்ளார்கள். ஆனால் நடிகையோ, இப்போது எல்லாம் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியாது. நான் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறி, மறுத்துவிட்டாராம். இதனால் அப்செட் ஆன நடிகரின் குடும்பம், நடிகைக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்ததாம். ஒரு கட்டத்தில் நடிகை திருமண வாழ்க்கையே வேண்டாம் என முடிவெடுத்து, விலகிவிட்டாராம். நடிகையின் விவாகரத்துக்கு இதுவும் ஒரு காரணமா என தென்னிந்திய சினிமாவில் அவ்வப்போது பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X