கணவரின் கையை மீறி குதிக்கும் நடிகை.. வர வர போக்கே சரியில்லையாம்.. அதுக்காக இப்படியா?

By Staff

சென்னை: இந்த நடிகை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகை. இந்திய திரையுலகில் கவனத்தை ஈர்த்தாலும் நடிகைக்கு பாலிவுட்டில் கொஞ்சம் மவுசு அதிகம். தனது கடந்த காலத்தில் ஏகப்பட்ட தில்லாலங்கடி படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்தியாவுக்கு வந்த பின்னர் நடிகை மீது பலருக்கும் இதே அணுகுமுறைதான் இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்படி இருக்கையில் நடிகையின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த பேச்சுக்கள் திரைத்துறையில் அதிகரித்துள்ளது.

அதாவது நடிகை இந்தியாவில் குடியேறியதும் பல திரைப்பிரபலங்கள் தொடங்கி அரசியல் புள்ளிகள் வரை பலரும் நடிகையை தங்கள் வலையில் வீழ்த்த போராடிப் பார்த்தார்கள். இதற்காக நடிகைக்கு தினமும் பல புரோபோசல்கள் குவிந்து வந்தது. சிலர் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கிறேன் என்று எல்லாம் நடிகையை விலை பேசி உள்ளார்கள். ஆனால் நடிகை அதற்கு எல்லாம் கொஞ்சம் கூட மசியவில்லை.

இப்படி இருந்த நடிகை கடந்த சில மாதங்களாகவே தனது கணவருக்கு அல்வா கொடுக்கும் வேலையை லாவகமாக செய்து வருகிறாராம். அதாவது படப்பிடிப்பே இல்லை என்றாலும் படப்பிடிப்பு இருக்கிறது என்று வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாராம். மேலும் அவரது கணவர் சொல்வதை பல நேரங்களில் கேட்பதே இல்லையாம். நடிகை குறித்து எல்லாம் தெரிந்து தான் நடிகையை திருமணம் செய்து கொண்டார் அவர். அப்படி இருக்கையில் நடிகையும் கணவர் தான் கண் கண்ட தெய்வம் என்று இருந்து வந்தார்.

Cinema Gossip Actress Who Dressed Too Much of Glamour And Never Mind Her Husband

கணவரை கண்டுகொள்ளாத நடிகை: ஆனால் நடிகையின் சமீபத்திய நடவடிக்கைகள் பலருக்கும் நடிகை மீது அதிருப்தியையும் கொஞ்சம் ஷாக்கையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது, நடிகை பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அதுவும் தனது கணவர் உடன் கலந்து கொள்ளும் போதும் ஓவர் கிளாமராக உடைகள் அணிந்து வருகிறாராம். இது தொடர்பாக கணவரே பலமுறை நடிகையிடம் எடுத்துக் கூறியும், நடிகை கேட்பதாக இல்லையாம்.

தப்பான அட்வைஸ்: பாலிவுட் போன்ற திரை உலகில் கொஞ்சம் கிளாமர் எல்லாம் போதாது, எக்ஸ்ட்ரீம் கிளாமர் தான் ஒர்க்-அவுட் ஆகும் என்று பலரும் நடிகைக்கு அட்வைஸ் செய்ததன் விளைவுதான் நடிகையின் இந்த மாற்றத்திற்கு காரணமாம். ஆனால் வாய்ப்புகள் வரும்போது கணவர் விட்டு சென்று விட்டால் என்ன செய்வது என்று நடிகை கொஞ்சம் கூட யோசிக்கவில்லை என்றும் சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X