அம்மாவை ஏமாற்றியவர் முகத்தை காலத்துக்கும் பார்க்க விரும்பாத நடிகை.. இப்படி ஒரு கொடுமையா?
சென்னை: இந்த நடிகை தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் கொடி கட்டிப் பறந்த நடிகை. மொத்த திரையுலகிலும் இருக்கும் முரட்டு சிங்கிள் நடிகைகளில் இவரும் எப்படியும் டாப் 5 லிஸ்ட்டில் இடம் பெறும் அளவுக்கு, நடிகை முரட்டு சிங்கிள் என்று கூறும் அளவுக்கு, நடிகைக்கு வயதாகிவிட்டது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் அவ்வப்போது ஏதாவது கிசுகிசுக்களில் சிக்கி விடுகிறார்.
நடிகை இப்படி திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் நடிகையோ நான் சிங்கிளாகவே நிம்மதியாக இருக்கிறேன். வாழ்வதே நிம்மதியாக இருக்கத்தானே தவிர வேறு எதற்கும் இல்லை. அப்படி இருக்கையில் நான் இப்போது நிம்மதியாகத்தான் இருக்கிறேன். அப்படி இருக்கையில் நான் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தடாலடி பதில் கொடுத்துள்ளார்.

கொடுமை: இப்படி இருக்கையில் நடிகை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணமே நடிகையின் அம்மாவுக்கு நேர்ந்த கொடுமைதான் என்று கூறப்படுகிறது. அதாவது நடிகையின் அம்மாவைத் திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகள் அதாவது நடிகையும் நடிகையின் சகோதரியும் பிறந்த பின்னர், தனது அம்மாவை நட்டாற்றில் விட்டுவிட்டு நடிகையின் அப்பா சென்றுள்ளார். நடிகையையும் நடிகையின் சகோதரியையும் பெரும் சவால்களுக்கு இடையில் வளர்த்தவர் நடிகையின் அம்மாவும் அவரது பாட்டியும் தான்.
திருமணம்: தனது அம்மாவுக்கு ஏற்பட்ட நிலையைப் போல தனக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நடிகை அவரது இளம் வயதிலேயே திருமணம் கூடவே கூடாது என்று முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், தனது பள்ளிச் சான்றிதழில் தனது பெயருக்குப் பின்னால், தனது அப்பாவின் பெயரைச் சேர்க்காமல் தனது அம்மாவின் பெயரைத்தான் சேர்த்துள்ளாராம் நடிகை.
அம்மாவுக்கு ஏற்பட்ட நிலை: அதுதான் அவரது அரசு ஆவணங்கள் அனைத்திலும் உள்ளதாம். இது மட்டும் இல்லாமல் தனது சகோதரி கூட தனது அப்பாவைச் சந்தித்திருக்கிறாராம். ஆனால் நடிகையோ அவரை எக்காரணம் கொண்டும் சந்தித்து விடக்கூடாது என்று முடிவெடுத்தது மட்டும் இல்லாமல், அவரைச் சந்திக்க வேண்டிய தேவையே இல்லை என்றும் தீர்க்கமாக இருக்கிறாராம். நடிகையின் இந்த முடிவுக்கு காரணமே அவரது அம்மாவுக்கு ஏற்பட்ட நிலைமைதானாம். நடிகையின் இந்த தகவல் குறித்து தெரிந்தவர்கள் உச்சு கொட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











