நடிகர் புருஷன் செய்த அயோக்கியத்தனம்.. நடிகை மனைவி எடுத்த முக்கிய முடிவு.. வெறித்தனமாக இருக்கேப்பா!

By Staff

சென்னை: இந்த நடிகர் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியது மலையாள சினிமாதான் என்றாலும், தென்னிந்திய அளவில் நன்கு அறியப்படும் நடிகர்தான். மலையாள சினிமாவில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. பழகுவதற்கும் இனிமையானவர் என்று பெயரெடுத்த இவரை நடிகை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் நடிகை காதலிக்கும்போதே நடிகர் கொஞ்சம் எல்லாம் இல்லாமல், ரொம்பவும் மோசமானவராக இருந்துள்ளார். இது நடிகைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தனி மீட்டிங் ஏற்பாடு செய்தால் தான் வாய்ப்பு கொடுப்பாராம். இப்படியான நடிகரின் குணத்தை நன்றாக தெரிந்து கொள்ளாமல் நடிகை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் சும்மா எல்லாம் சொல்லக் கூடாது என்பது போல, நடிகையை திருமணம் செய்த சில ஆண்டுகள் நடிகர் எந்த கிசுகிசுவுக்கும் சிக்காமல், மிகவும் நல்ல பெயர் எடுத்தே வந்துள்ளார். இதுக்கு எல்லாம் காரணம் அந்த நடிகைதான் என்று கூட சிலர் புகழ் பாடினர்.

Cinema Gossip Actress Who Took Strong Decision To Divorce Her Actor Husband For Valuable Reason

நடிகரின் ஓவர் ஆட்டம்: ஆனால் நடிகருக்கும் மற்றொரு நடிகைக்கும் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக நடிகர் நடிகை பழிவாங்க வேண்டும், அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஆண்டுகள் ஆறப்போட்டு அதன் பின்னர் நடிகையை அவமானப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளார். இவரே நேரடியாக களமிறங்கினால் வம்பு என்று, நடிகையை அடியாட்கள் வைத்துக் கடத்தி, நடிகையிடம் அடியாட்களை பாலியல் சீண்டலில் ஈடுபட தூண்டியுள்ளார்.

தைரியமான முடிவு: இது குறித்து நடிகரின் மனைவிக்கு தெரியவர, நடிகரின் மனைவியும் நடிகையுமான அவர் நடிகரை கண்டபடி திட்டியுள்ளார். அதன் பின்னர் கொஞ்ச நாட்கள் பேசாமலும் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இப்படியான ஒருவருடன் வாழ்க்கையை எடுத்துச் செல்வது என்பது மிகவும் சிக்கலானது என தீர்மானித்த நடிகை, நடிகரை தனது வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிய முடிவு எடுத்து விவாகரத்து வாங்கினாராம். நடிகையை விவாகரத்து செய்ததும் நடிகர் மீண்டும் ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டு உற்சாக வாழ்க்கை வாழ்ந்து வருகிறாராம். ஆனால் நடிகையோ, இப்படி ஒரு மனிதனுடன் இணைந்து வாழ்வதைக் காட்டிலும் தனிமையே மேல் என்று நிம்மதியாக இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X