பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புது மாப்பிள்ளை நடிகர்? நடிகையை அசிங்கப்படுத்த வேலையை ஆரம்பித்த எக்ஸ்

By Staff

கொச்சி: இந்த நட்சத்திர ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறது. இவர்களின் திருமணம் இதுவரை மலையாளத் திரையுலகில் யாருக்குமே நடக்காத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகும் பேச்சுக்கள் அடிபடுகிறது. இதில் இப்போது ஏற்பட்டுள்ள சிக்கல் என்றால், நடிகை தரப்பில் தான்.

அதாவது நடிகை சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ஒருவரை காதலித்தார். நடிகையும் அந்த நடிகரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அதற்காக இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றது. ஆனால் நடிகைக்கும் நடிகருக்கும் ஏற்பட்ட மனக் கஷ்டத்தில் இருவரும் பிரிவதாகவே அறிவித்தனர். இதில் என்ன பெரிய சங்கடம் என்றால் நடிகை நடிகர் இருக்கும் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லையாம். இன்னும் சொல்லப்போனால் நடிகர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் நடிகை கலந்து கொள்வதே இல்லையாம். அது சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி. இப்படி இருந்து வந்த நிலையில் நடிகைக்கு பக்கத்து மாநில நடிகருடன் ஏற்பட்ட காதல் திருமணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

Cinema Gossip Betrayal amp amp Revenge Ex-Lover Leaks Private Photos of Actress s Fianc to Stall Wedding

பழிவாங்கும் முன்னாள் காதலன்: இதில் பிரச்னை என்னவென்றால் நடிகை தற்போது காதலித்து கரம் பிடிக்க போகும் நடிகரும் ஒரு பெண்ணும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறதாம். இவ்வளவு நாட்கள் இல்லாமல் தற்போது திடீரென நடிகர் குறித்த புகைப்படம் அதுவும் அந்தரங்க புகைப்படம் வெளியாக காரணமே, நடிகர் திருமணம் செய்து கொள்ளவுள்ள நடிகையின் முன்னால் காதலனான நடிகர் தான் என்று கூறப்படுகிறது.

பிரச்னைக்காக காத்திருப்பு: அதாவது இந்த புகைப்படம் நடிகையின் முன்னாள் காதலன் வசம் எப்போதோ வந்துவிட்டதாம். ஆனால் நடிகையை பழிவாங்க உடனே வெளியிட்டிருந்தால் நன்றாக இருக்காது. தன்னைத் திருமணம் செய்துவாக கூறிவிட்டு, அதன் பின்னர் திருமணம் நெருங்கி வந்த கால கட்டத்தில் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லி தன்னை அவமானப்படுத்தியதற்கு பழிவாங்க, நடிகையின் திருமண தேதி நெருங்கி வரும் காலத்தில் ரிலீஸ் செய்தால் தான் சரியாக வரும் என்பதால் இப்போது கசிய விட்டுள்ளாராம். தற்போது நடிகரின் அந்தரங்க புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம். ஆனால் நடிகையின் முன்னாள் காதலன் நடிகர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய பிரச்னையாக மாறவில்லையாம். அதற்காக காத்துக் கொண்டு இருப்பதுடன் மேலும் சில புகைப்படங்களும் சில வீடியோக்களுமே கூட நடிகையின் முன்னாள் காதலன் வசம் இருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X