டாப் நடிகரின் பெயரை பயன்படுத்தி கல்லா கட்டிய மாஸ் நடிகர்.. போட்ட பணத்தை எடுக்கவே செம போராட்டம் போலயே

By Staff

சென்னை: இந்த மாஸ் நடிகர் இதுவரை அவரது திரை வாழ்க்கையில் வாங்க அளவுக்கு அதிகபட்ச சம்பளத்தை வாங்கி, படத்தில் கமிட் ஆகி, நடித்தும் கொடுத்துவிட்டார். சரி படத்தை திருவிழா காலத்தில் ரிலீஸ் செய்தால் அவரது சம்பளம், படத்தில் மற்ற நடிகர்கள் கலைஞர்களின் சம்பளம் படத்தின் மொத்த உருவாக்க செலவு என போட்ட முதலீட்டை லாபத்தோடு எடுத்துவிடலாம் என்று நினைத்தார்கள்.

ஆனால் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று நினைக்கும் போது அவருக்கு சில பல புறக் காரணங்கள் அவருக்கு ஒத்து வரவில்லை. இதனால் மொத்த படக் குழுவுமே, படத்தை ரிலீஸ் செய்தால் லாபம் பார்ப்பதை விட, போட்ட முதலீட்டையே வசூலிக்க முடியாது போலயே என்று நினைத்து உள்ளார்கள். இப்படி இருக்கையில், தியேட்டர் வசூலில் எவ்வளவு பணம் குறையுமோ அந்த பணத்தை வேறு வழியில் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்ட படக்குழு படத்தின் புரோமோசன் விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டது.

Tamil Cinema Gossip Mass Actor Who Used To Top Actor Name For Money To Compensate His Movie Box Office Collection

டாப் நடிகர் பெயர்: இது மட்டும் இல்லாமல் அந்த புரோமோசன் விழாவுக்கு மாஸ் நடிகருக்கு போட்டியாளரான டாப் நடிகர் கலந்து கொள்வார், அதற்கு இப்படியான காரணங்கள் எல்லாம் உள்ளது, அப்படியான காரணங்கள் எல்லாம் உள்ளது என்று தனக்கு நெருக்கமானவர்களை வைத்து இணையத்தில் கம்பு சுத்திக் கொண்டு இருந்தது படக்குழு. இவர்கள் இப்படி ஒரு புரளியைக் கிளப்பியதால் அதிகப்படியான ரசிகர்களும் இருவரையும் ஒரே மேடையில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து, பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகளை வாங்கினார்கள்.

கோடிகளில் கல்லா: ஆனால் நம்பியவர்களுக்கு, எல்லாம் அல்வா கொடுத்துவிட்டு, அந்த புரோமோசன் விழா மூலம் மட்டும் படக்குழு கிட்டத்தட்ட ரூபாய் 130 கோடிகள் வரை கல்லா கட்டி விட்டதாக பேச்சு திரைத்துறையில் ஓடிக் கொண்டு உள்ளது. இப்படி இருக்கையில், படக்குழு டாப் நடிகரின் பெயரைப் பயன்படுத்தி நல்லா கல்லா கட்டிட்டாங்க என்று விமர்சித்தும் வருகிறார்கள். படம் வெளியாகி எந்த அளவுக்கு வசூல் கொடுத்து படக்குழுவை காப்பாற்றும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X