இசையமைப்பாளரின் பர்ஷனல் மீட்டிங் லீலைகள்.. ஜெஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த பிரபலம்.. பலே கில்லாடிதான் போல!
சென்னை: இந்த பெண் பிரபலம் இந்தியா முழுவதும் நன்கு தெரிந்தவர்தான். அதுவும் இவர் ஒரு விளையாட்டின் மூலம் நன்கு அறிமுகமானவர். ரொம்பவும் பிரபலமான இந்த பெண் பிரபலம், பல இளைஞர்களின் கனவு நாயகி என்றே கூறலாம். இப்படி இருக்கும்போது, இவருக்கும் இசையமைப்பாளர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட பழக்கம் என்பது பெரும் கவனத்தை ஈர்த்தது. இப்படி இருக்கும்போது, இசையமைப்பாளரும் அந்த பிரபலமும் தங்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்று இருக்கும்போது, இசையமைப்பாளரின் சிலபல லீலைகள் வெளியே தெரியவர, பிரபலம் ஷாக் ஆகியுள்ளாராம்.
அதாவது இந்த பிரபலம் எப்படியும் வருடத்தில் பல மாதங்கள் இங்கும், பல மாதங்கள் வெளிநாடுகளிலும் இருப்பாராம். பிரபலம் வெளிநாடுகளில் இருக்கும் போது இசையமைப்பாளாரைக் கையிலேயே பிடிக்க முடியாதாம். அதற்கு காரணம், தனது இசைக் குழுவில் இணைய வேண்டும் என்ற ஆர்வத்தில் இளம் பெண் இசைக் கலைஞர்கள் வந்தால், முதலில் அவர்களுடன் ஒரு பர்ஷனல் மீட்டிங் செய்துவிட்டுத்தான் அவர்களை தனது குழுவில் சேர்க்கலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பாராம்.

பர்ஷனல் மீட்டிங் சேட்டைகள்: அப்படியே ஒருவரை சேர்த்துக் கொண்டாலும், தான் விருப்பப்படும் போது எல்லாம், பர்ஷனல் மீட்டிங்கிற்கு வரச் சொல்லுவாராம். அதன் பின்னர் வேறு ஒரு பெண் இசைக்கலைஞர் வந்தால் இந்த இசைக் கலைஞரைக் நிறுத்திவிட்டு, அவரை பர்ஷனல் மீட்டிங்கிற்கு வரச் சொல்லுவாராம்.
ஆதாரம்: இப்படி இருக்கையில், இவர் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சிக்குச் சென்ற போது, தனது குழுவில் இருந்த பெண் இசைக் கலைஞரை தங்கியிருந்த ஹோட்டலில் இருக்கும் நீச்சல் குளத்தில் இணைந்து குளிக்கலாம் வா என்று அழைத்துள்ளார். இதை அவர் அந்த பெண்ணுக்கு வாட்ஸ்-ஆப்பில் மெசேஜாக அனுப்பி உள்ளார். மேலும், அதே பெண்ணை, அவரது அறையில் இருந்து தனது அறைக்கும் வரச் சொல்லி மெசேஜ் அனுப்பி உள்ளாராம்.
தப்பித்த பிரபலம்: தற்போது இந்த மெசேஜ் தொடர்பான தகவல்களும் சில ஆதாரங்களும் பெண் பிரபலத்திற்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் பிரபலம், இசையமைப்பாளரை கடுமையாக திட்டித் தீர்த்து வருகிறாராம். மேலும், இனி உன்னுடன் எனது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல எதுவும் இல்லை, உன்னை நம்பி ஏமாந்தது எல்லாம் போதும் என்றும் தெரிவித்து விட்டாராம்.


Click it and Unblock the Notifications











