ஒர்க் அவுட் ஆகாத அக்கட தேசத்து நடிகையின் ஆக்‌ஷன்.. உச்சகட்ட சந்தோஷத்தில் நம்பர் நடிகை!

By Staff

சென்னை: அக்கட தேசத்து நடிகை பேய் படம் என்றாலும் சரி, ராஜா காலத்து கதை என்றாலும் சரி சரியான ஆப்ஷனாக இவர் இருந்தார். கிட்டத்தட்ட 7 அடி உயரம். உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு, எடை, வசீகரமான தோற்றம், கை தேர்ந்த நடிப்பு என பக்காவான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் ஜொலித்தவர் அந்த நடிகை.

கடந்த சில ஆண்டுகளாகவே அந்த நடிகை பெரிதாக படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார். அதற்கு காரணம் நடிகை கமிட் ஆன ஒரு படத்தில் உடல் எடையைக் கூட்டி குறைக்க வேண்டி இருந்தது. இதனால் அவர் உடல் ரீதியாக பல பிரச்னைகளை எதிர் கொண்டார். அப்படி இருக்கும்போது நடிகையால் படங்களில் அடுத்தது கமிட் ஆக முடியவில்லை. இது மட்டும் இல்லாமல் படத்தில் கமிட் ஆன போது நடிகை எடுத்த தவற முடிவுகளில் ஒன்று, முதலில் ஒல்லியாக இருக்கும் போது இருந்த காட்சிகளை படமாக்கவும், அதன் பின்னர் உடல் எடையை கூட்டிய பின்னர் மீதி காட்சிகளை படமாக்க ஒத்துக் கொண்டதும் தான். இதனால் அவர் சில ஆண்டுகளாக படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்.

Cinema Gossip Number Actress Who Got Very Happy After Tollywood Actress Action Movie Receives Mixed Reviews

டோலிவுட் நடிகை: இப்படி இருக்கும்போது கதாநாயகியை மையப்படுத்திய படத்தில் நடித்து கம்பேக் கொடுக்க திட்டமிட்டு நடிகை மீண்டும் களமிறங்கினார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தார்கள். இந்த படத்தின் அறிவிப்பின் போது இந்த நடிகைதான் உச்ச நடிகை அந்தஸ்துக்கு சொந்தக்காரர் என்று படக்குழு அறிவித்தது. இதனால் நம்பர் நடிகையின் தரப்பில் இருந்து இந்த படக்குழுவை அணுகி, நான் தான் உச்ச நடிகை எதற்காக இப்படி செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்களாம்.

நம்பர் நடிகை குஷி: இப்படி இருக்கும்போது இந்த விஷயம் வெளியே வர நம்பர் நடிகை அப்படியே அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டார். காரணம் ரசிகர்கள் நம்பர் நடிகையை இணையதளத்தில் போட்டு தாளித்து எடுத்துவிட்டார்கள். அதன் பின்னர் தான் அவர் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும்போது அக்கட தேசத்து நடிகையின் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்று கூறப்படுகிறது. இதனால் நம்பர் நடிகை ஓவர் குஷியில் உள்ளாராம். அதுவும் ட்ரீட் வைத்து கொண்டாடும் அளவுக்கு நம்பர் நடிகை செம குஷியில் உள்ளாராம். தலைக்கணம் நிறைந்த நடிகை ட்ரீட் வைத்து கொண்டாடுவதில் எல்லாம் ஆச்சரியமே இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் விஷயத்தை கேள்விப்பட்டவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X