சூப்பர் ஸ்டார் நடிகையின் சபதம்- ரூ200 கோடி புராஜெக்ட் பறிபோன துயரம்-உச்சத்துடன் இனி ஜோடி கிடையாது!
சென்னை: தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார், கணவரின் ரூ200 கோடி புராஜெக்ட் பறிபோன துயரத்தில் புலம்பித் தவிக்கிறாராம். கணவரின் ரூ200 கோடி புராஜெக்ட் பறிபோனத்துக்கு காரணமான உச்சநடிகருடன் ஜென்மத்திலும் நடிக்கப் போவதில்லை என சபதம் போட்டிருக்கிறாராம் அந்த லேடி சூப்பர் ஸ்டார்.

கோடம்பாக்கம் வட்டாரத்தில் லேடி சூப்பர் ஸ்டாரின் தடாலடி சபதம்தான் இப்போது ஹாட் டாபிக்காம். தீரமான படத்தை முடித்த கையோடு புதிய படத்தை தொடங்கினார் உச்சநடிகர். ரேஸில் முந்திக் கொண்டே இருப்பதில் முனைப்பாக இருக்கும் அந்த நடிகருக்கு லேடி ஸ்கெட்சூப்பர் ஸ்டாரின் கணவர் ஸ்கெட்ச் போட்டார்.
இது ஒர்க் அவுட் ஆனது. வெளிநாட்டு தயாரிப்பும் ஓகே சொன்னது. லேடி சூப்பர் ஸ்டாரின் கணவருக்கு ரூ8 கோடி அட்வான்ஸும் கிடைத்தது. உடனே ஜோடியாக தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செம்ம ஜாலி ட்ரிப் போனார்கள். சரி சரி.. படத்தை தொடங்கலாமா என உச்சநடிகர் நச்சரிக்க ஒரு ஸ்கிரிப்ட்டை நீட்டினார் லேடி சூப்பர் ஸ்டாரின் கணவர். அதனை பார்த்த உடனே நறநறவென பல்லைக் கடித்த கையோடு வெளிநாட்டு தயாரிப்புக்கு போன் போட்டு வேலைக்கு ஆகாது- கவுத்துவிடும் என அலாரம் அடித்துவிட்டார்.

அப்புறம் உச்ச நடிகர்- டைரக்டர் என வெளிநாட்டில் பெரும் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. இந்த பஞ்சாயத்தில் ஒருவழியாக டைரக்டர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆக ரூ200 கோடி புராஜெக்ட்டை சட்டியில் சரக்கு இல்லாத ஒரே காரணத்தால் பறிகொடுத்தார் டைரக்டர்.
இத்தனைக்கும் லேடி சூப்பர் ஸ்டாரும் இந்த அக்கப்போர் கோதாவில் களமிறங்கிப் பார்த்தார். ஆனாலும் ஏறெடுத்துப் பார்க்கவும் ஆளில்லை கதையாக அவரும் கைவிடப்பட்டாராம். இத்தனை அவமானத்துக்கும் காரணமே அந்த உச்சநடிகர்தானே.. எந்த ஜென்மத்திலும் அந்த உச்ச ஆளுடன் நடிக்கவே போவது இல்லை என சீற்றமாக மட்டுமல்ல சபதமாகவும் சொன்னாராம் லேடி உச்சம்.. இதுதான் செம்ம கிசுகிசுவாக திரைப்பட வட்டாரங்கள் பேசுகின்றன.


Click it and Unblock the Notifications











