ருசி கண்ட நடிகர்.. ஆசையை அடக்க முடியாமல்.. பணத்தை வாரி இறைக்குறாரே

By Staff

சென்னை: இந்த நடிகர் தென்னிந்திய அளவில் பெரிய நடிகர் தான். அதுவும் தெலுங்கு திரையுலகில் இவருக்கு இருக்கும் பிசினஸ் இன்றைக்கு அவரை பான் இந்தியா ஸ்டாராக மாற்றி உள்ளது. நடிகருடன் இணைந்து நடிக்க நடிகைகள் பலரும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என யார் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருக்கிறார்களாம்.

இப்படி இருக்கையில் நடிகரோ இப்படியான சிக்கலுக்குள் நாம் சிக்கிவிடக் கூடாது என்று, நடிகர்கள் தேர்வை எல்லாம் பெரும்பாலும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் வசம் விட்டுவிடுகிறாராம். அதுவும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இணைந்து இரண்டு முதல் மூன்று நடிகைகளைக் கூறவேண்டுமாம், அவர்களில் ஒருவரை ஃபைனல் செய்வது மட்டும் தான் அவரது வேலையாம்.

Cinema Gossip Pan-India Star Goes All-In on Bollywood Spending Big Renting Luxury Villa amp amp Chasing Massive Releases

இப்படி இருக்கையில் நடிகரின் பார்வை தற்போது முழுக்க முழுக்க பாலிவுட் பக்கம் திரும்பி உள்ளதாம். அதுவும் இவரது கடைசி படம் வசூலில் பிரமாண்டமான வசூலைக் குவித்ததால் நடிகர் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்துள்ளார். அதிலும் இவருக்கு பாலிவுட்டில் இருந்து அதிக வசூல் கிடைத்ததால், தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு போன இயக்குநரை அழைத்து கதை கேட்டு, நடிக்க அது தான் காரணமாம்.

நடிகரின் பிளான்: இப்படி இருக்கையில் நடிகர் இந்த படத்திற்காக தென்னிந்தியாவில் இருந்து தயாரிப்பு நிறுவனத்தை நியமித்து, பாலிவுட்டில் படத்தின் ரிலீஸ் உரிமத்தை வாங்க பிளான் போட்டு விட்டாராம். இது மட்டும் இல்லாமல் இதற்காக இந்தி மார்க்கெட்டில் உள்ள பெரும்பான்மையான திரையரங்குகளை கையில் வைத்திருக்கும் டிஸ்ட்ரிபியூட்டர்களை இப்போது இருந்தே சந்தித்து பேசி வருகிறாராம்.

மும்பை பறக்கும் நடிகர்: இதனால் படப்பிடிப்பு முடிந்து சில நாட்கள் இடைவெளி கிடைத்தால் கூட, தனது வீட்டிற்கு போகாமல், மும்பைக்கு பறந்து விடுகிறாராம். அதுவும் நடிகர் தான் மும்பை செல்லும் போது எல்லாம் தங்குவதற்கு கடற்கரையைப் பார்த்தபடியான பெரிய வில்லா ஒன்றை மாதம் சுமார் 15 முதல் ரூபாய் 20 லட்சங்கள் வரை வாடகைக்கு எடுத்துள்ளாராம். இந்த வாடகை, அங்கு டிஸ்ட்ரிபியூட்டர்கள் தனியாக கவனிப்பது உள்ளிட்ட பலவற்றுக்கும் நடிகர் பணத்தை வாரி இறைக்கிறார். ஆனால் இப்படி இறைத்தால் தான் நடிகரின் படம் வெளியாகும்போது அதிக தியேட்டர்கள் பிடிக்க முடியும் என்று பிளான் போட்டு வருகிறாராம். பணத்தாசையால் நடிகர் ஓவர் ஆட்டம் போடுகிறாரோ என்ற பேச்சும் அடிபடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X