கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் நடிகையை டார்ச்சர் செய்த தயாரிப்பாளர்.. இவ்வளவு மோசமா?

By Staff

சென்னை: ஒரு படத்தில் கமிட் ஆன நடிகை அந்த படத்தில் முழுமையாக நடித்து முடித்து வெளியே வருவதற்குள் அவருக்கு ஏதாவது பிரச்னை, தர்ம சங்கடம், அல்லது பாலியல் சீண்டல் என ஏதாவது ஒன்றினால் பாதிப்புக்குள்ளாகாமல் இருந்தால் அது அதிசயம் தான். ஒரு சில படங்களில் புது முக நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம், கதாநாயகன் தொடங்கி, ஆண் இயக்குநர், ஆண் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் என பலரது காம இச்சைக்கு பலியாக்கிக் கொண்டு இருக்கும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி இருக்கும்போது நன்கு அறியப்பட்ட நடிகை கர்ப்பமாக இருக்கிறார் என்பது தெரிந்தும், தயாரிப்பாளர் அவரை படப்பிடிப்புத் தளத்திலேயே டார்ச்சர் செய்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக ஒரு படத்தில் நடிகை கமிட் ஆகும்போது, படத்தில் என்னென்ன காட்சிகள் உள்ளது. குறிப்பாக கிளாமராக எத்தனை காட்சிகளில் நடிக்க வேண்டும். அந்த காட்சியில் உடன் நடிப்பவர்கள் யார்? பாடலில் என்ன மாதிரி உடை அணிய வேண்டும். கிளாமரான உடையில் நடனமாடும் பாடலில் குரூப் டான்சர்ஸ் ஆடுவார்களா அல்லது கதாநாயகனோடு மட்டும் தானா? படுக்கை அறைக் காட்சிகள் உள்ளதா என்று பல கேள்விகளைக் கேட்டு விட்டுத்தான் கமிட் ஆவார்கள்.

நடிகைகள் பலரும் இந்த மாதிரி கேட்க காரணம், தொடக்க காலங்களில் படத்தில் கமிட் செய்து விட்டு, அதன் பின்னர் படப்பிடிப்புத் தளத்தில் நடிகைகளுக்கு கிளாமரான உடைகளை அணிய வைத்து நடிக்க வைத்த பல சம்பவங்கள் தமிழ் திரைத்துறை மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் நடைபெற்றுள்ளது. இதனாலே நடிகைகள் கவனமாக இருக்கிறார்கள். சிலர் இது தெரியாமல் சிக்கிக் கொள்கிறார்கள்.

Cinema Gossip Producer Who Gave Torture To Actress At Shooting Spot When She Was Pregnant

தயாரிப்பாளர் கொடுத்த டார்ச்சர்: இப்படி இருக்கும்போது இந்த நடிகை மாஸ் ஆக்டருக்கே ஜோடியாக நடித்தவர். அந்த அளவுக்கு நடிகைக்கு அனுபவமும் ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. இப்படியான நடிகை ஒரு படத்தில் கமிட் ஆன பின்னர், கர்ப்பம் அடைந்தார். இப்படி இருக்கும்போது, தான் கர்ப்பமான பின்னரும் தான் கமிட் ஆன படத்தினை முழுவதுமாக முடித்துக் கொடுக்கலாம் என முடிவில் கர்ப்பகால சவால்களையும் கடந்து நடிகை படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றுள்ளார். இப்படி இருக்கும்போது ஒரு காட்சியில் கிளாமராகவும் அதே நேரத்தில் மிகவும் இறுக்கமாகவும் ஆடை அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நடிகையோ தான் கர்ப்பமாக இருப்பதாகவும், எனவே இறுக்கமான ஆடைகளை தன்னால் அணிய முடியாது எனவும் கூறியுள்ளார்.

நடிகை அப்செட்: ஆனால் தயாரிப்பாளரோ, அது குறித்து எல்லாம் எந்தவிதமான அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல், இறுக்கமான ஆடைகளை அணிந்து தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். நடிகையும் இறுக்கமான ஆடைகளை அணிந்து நடித்தும் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் உடல் ரீதியாக நடிகைக்கு அசௌகரியம் ஏற்பட்டபோது கூட, மருத்துவரைப் பார்க்க ஏற்பாடு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலைத் தெரிந்து கொண்ட பலரும், நடிகையின் நிலையைக் கண்டு வேதனை அடைந்துள்ளார்கள். அதேபோல் தயாரிப்பாளரின் மற்ற சேட்டைகள் குறித்தும் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாத தயாரிப்பார்களும் திரை உலகில் இருக்கிறார்கள் எனவும் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X