ஜூனியர் நடிகையுடன் கேரவன் கூத்து.. டென்ஷன் ஆன நடிகர்.. உதவியாளருக்கு விழுந்த அடி.. கட்டான ஷூட்டிங்!

By Staff

மும்பை: இந்த பாலிவுட் நடிகர் ஏற்கனவே சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் நடிகைகள் விஷயத்தில் ரொம்ப வீக்னஸ் ஆன நடிகர் என்று கூறுகிறார்கள். தன்னுடன் படத்தில் ஒரு நடிகை நடிக்கிறார் என்றால் அவரைக் கேட்காமல் யாரையும் கமிட் செய்ய முடியாதாம்.

இப்படி இருக்கையில் நடிகர் ஒரு படத்தில் கமிட் செய்யப்பட்ட ஒரு ஜூனியர் நடிகை மீது கண் வைத்துக் கொண்டே இருந்துள்ளார். அந்த படத்தில் நடிகையின் தோழி கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் தான் அந்த ஜூனியர் நடிகை என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் நடிகருக்கும் நடிகைக்கும் இடையிலான காட்சியின் போது அந்த ஜூனியர் நடிகையும் இருந்துள்ளார். ஜூனியர் நடிகையைப் பார்த்த பின்னர், காட்சி முடிந்த பின்னர் தன்னை வந்து சந்திக்கச் சொல்லி உள்ளார்.

அந்த ஜூனியர் நடிகையும் நடிகரைச் சந்திக்க நடிகரின் கேரவனுக்கு சென்றுள்ளார். ஜூனியர் நடிகையைப் பார்த்ததும், நீ ஏன் ஜூனியர் நடிகையாக நடித்துக் கொண்டு இருக்கிறாய்? நீ பக்காவான கதாநாயகி மெட்டீரியல். இவ்வளவு அழகா இருந்துட்டு எதற்காக இப்படி நூறுகளுக்கும் ஆயிரங்களுக்கும் வேலை செய்து கொண்டு உள்ளாய்? எனது அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் எனக்கு ஜோடியாக நடிக்கும் கதாபாத்திரம் கொண்ட கதை. நீ அதில் நடிக்க சரியான நடிகை என்று எனக்குத் தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Cinema Gossip Producer Who Got Anger after Actor Very Close with Junior Actress In Caravan

ஏமாந்த ஜூனியர் நடிகை: இதனால் அந்த ஜூனியர் நடிகையும் நடிகர் தனது வாழ்க்கையையே மாற்றப் போகிறார் என்று நம்பிக்கையோடு இருந்துள்ளார். ஆனால் நடிகரோ ஜூனியர் நடிகையை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இது போல சொல்லி உள்ளார். ஜூனியர் நடிகையும் திரையுலகில் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கத்தானே செய்யும். நம்மை பலரும் கேலி கிண்டல் செய்துள்ளார்கள். அவர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்றால் இதை எல்லாம் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று அந்த ஜூனியர் நடிகையும் நடிகரிடம் இருந்து சிக்னல் வந்தாலே கேரவனுக்கு சென்று விடுவாராம். இதனால் பல நாட்கள் படப்பிடிப்புத் தளத்தில் கால தாமதம் எல்லாம் ஆகி உள்ளதாம். பல நாட்கள் ஜூனியர் நடிகை நடிகரின் கேரவனுக்குள் சென்ற பின்னர் படப்பிடிப்பே நடக்காமல் எல்லாம் இருந்துள்ளது.

உதவியாளருக்கு அடி: இப்படி இருக்கையில் ஒரு முறை தயாரிப்பாளர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். வந்தவர் நேராக நடிகரின் கேரவனுக்குள் சென்றுள்ளார். நடிகரின் கேரவன் என்பதால் யாரும் அருகில் கூட வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நடிகரின் உதவியாளர் கொஞ்சம் அசால்ட்டாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் உள்ளே செல்ல நடிகர் ஜூனியர் நடிகையுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்துள்ளார். இதனால் கடுப்பான நடிகரோ தனது உதவியாளரைப் போட்டு அடி பின்னி எடுத்து விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X