முக்கோண காதலில் மூன்று நடிகைகள்.. வீக் எண்ட் ஆனா ஒரே அழிச்சாட்டியம்.. புதுசு புதுசா கிளம்புது!
சென்னை: இந்த மூன்று நடிகைகள் பற்றிய பேச்சு கடந்த சில மாதங்களாகவே புகைச்சல் இருந்த நிலையில் இப்போது இவர்களைப் பற்றிய பேச்சுதான் ஃபயர் பத்திக்கிச்சு எனக் கூறும் அளவிற்கு உலா வருகிறது. மூன்று பேரும் முக்கோணக் காதலில் இருக்கிறார்கள் என்ற பேச்சு இப்போது அதிகம் திரைதுறையில் அடிபடுகிறது.
இந்த நடிகைகளைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் அதில் ஒரு நடிகை மட்டும், மற்ற இருவரைக் காட்டிலும் ரொம்பவும் பிரபலமானவர். அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்து வருகிறார். முதலில் ஒரு நடிகருடன் நெருக்கமாக இருந்த நடிகை, நடிகர் இழுத்த இழுப்புக்கு எல்லாம் வந்துள்ளார். ஆனாலும் நடிகர் ஒரு கட்டத்தில் போர் அடிக்க, நடிகரைக் கழட்டி விட்டுவிட்டு, தனியாக இருக்கிறார். சிறந்த நடிகை என பெயர் எடுத்தாலும் சம்பாதிப்பது எல்லாம் எதுக்கு, நிம்மதியாக இருக்க தானே என்ற எண்ணம் நடிகை மனதில் பல நாட்களாக இருந்துள்ளது.

மூன்று நடிகைகள்: சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இரவு பார்ட்டியில் தான் மூன்று நடிகைகளும் சந்தித்துள்ளார்கள். இதில் இருவரது பெயர் கிட்டத்தட்ட ஒரே பெயர்தான். ஒருவர் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறார். பார்ட்டியில் சந்தித்த மூவருக்கும் போதை கொஞ்சம் அளவைத் தாண்டிச் சென்று விட்டதாம். இப்படியான நிலையில் ஒரு நடிகை மற்ற இருவரையும் தனது ஃபிளாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். போதையில் மூவரும் ரொம்பவும் நெருக்கமாக இருந்து உள்ளனர். விடிந்து போதை தெளிந்த பின்னர் தான் இரவு நடந்த சம்பவம் நினைவுக்கு வந்துள்ளது.
சம்பவம்: போதையில் அரங்கேறிய சம்பவத்தால், இப்போது எல்லாம் மூவரும் அடிக்கடி மீட்டிங் போட்டு விடுகிறார்களாம். இவர்களுக்குள் நடக்கும் விஷயங்கள் குறித்து தெரியாதவர்கள், மூவரில் யாரை பார்ட்டிக்கு அழைத்தாலும், மற்ற இருவரும் பார்ட்டியில் ஆஜராகி விடுகிறார்களாம். மூன்று பேரில் யாராவது இருவர் ஷூட்டிங் இல்லாமல் இருந்தாலே கச்சேரி நடைபெற்று விடுகிறதாம்.
முக்கோணக் காதல்: மூவரும் இணைந்து விட்டால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இரவில் தூங்கவே முடிவதில்லையாம். அந்த அளவிற்கு அவர்கள் சத்தம் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்களாம். மூன்று பேரும் முக்கோணக் காதலில் இருப்பது குறித்து இப்போதுதான் மும்பை திரையுலக வட்டாரத்திற்கு தெரியவந்துள்ளது. இவர்களின் இந்தக் கூத்து குறித்து தெரிந்து கொண்ட இயக்குநர் ஒருவர், இதையே கதையாகக் கொண்டு ஒரு படம் எடுத்து விடலாமா என்ற யோசனையில், ஒரு நடிகையிடம் அப்ரோச் செய்துள்ளார். ஆனால் அந்த நடிகையோ, இப்போது கால்ஷீட் இல்லை எனக் கூறி, அனுப்பிவிட்டாராம். அவர்களின் முக்கோணக் காதல் குறித்த பேச்சு திரைத்துறையில் வேகமாக உலா வருகிறது.


Click it and Unblock the Notifications











