நடிகரின் நாற்காலி ஆசையை முடித்து விடாமல் இருக்க மாட்டார்கள் போல.. அல்லக்கைகள் அலப்பறை தாங்கல!
சென்னை: இந்த நடிகர் சினிமாவில் திரை கிழியும் அளவுக்கு படங்களைக் கொடுத்து பெயர் எடுத்தவர். சினிமாவில் இவர் பேசும் பஞ்ச் டயலாக்குகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைப் பார்த்த நடிகரின் தீவிர விசுவாசி, நீங்க மட்டும் அரசியலில் கால் வைத்தால் ஒரே தேர்தலில் முதலமைச்சர் ஆகிவிடலாம் என உசுப்பேத்தி விட்டுள்ளார்.
ரசிகர்களுக்கு உசுப்பேத்துவது குறித்து அட்வைஸ் கொடுத்த நடிகர், தன்னை உசுப்பேத்துவது கூடத் தெரியாமல் அரசியலில் கால் பதித்து விட்டார் என விமர்சிக்கிறார்கள் சினிமா வட்டத்தில் இருப்பவர்கள். இப்படியான நிலையில் நடிகர் அரசியலில் கால் வைத்தது மட்டும் இல்லாமல் சில அதிரடி முடிவுகளையும் அறிவித்தார். இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், இத்தனை நாட்களாக ஸ்க்ரீனில் பார்த்துக் கொண்டு இருந்த நடிகரை, இனி நேரில் பார்க்க இதுதான் வழி என உற்சாகமடைந்தார்கள்.
நடிகர்: அரசியலில் களமிறங்கிய நடிகரை, கொள்கை என்ன, இந்த பிரச்னையில் நிலைப்பாடு என்ன என பலரும் கேள்வி எழுப்பினால், நடிகர் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்கிறார். ஆனால் இவருடன் இருக்கும் அரசியல் அல்லக்கைகள், தெள்ளத்தெளிவாக அரசியல் பேசுகிறேன், புள்ளி விபரங்களுடன் புட்டு புட்டு வைக்கிறேன் என அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் வெளியிடும் வீடியோக்களில் தெரிவிக்கும் தகவல்களைப் பார்த்த பலரும், இதில் பல தகவல்கள் உண்மைக்கு மாறானதாக உள்ளது என பதில் வீடியோ போட்டு, நடிகரின் அரசியல் அல்லக்கைகளை அடித்து துவைத்து வருகிறார்கள்.

பஞ்ச்: இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல், நடிகர் தேர்தலை எதிர்கொள்ள ஒரு வியூகரை நாடியுள்ளார். அவரோ நடிகர் முதல் தேர்தலிலேயே நடிகர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறிவிட்டதால், புது ரத்தம் பாய்ச்சியதைப்போல நடிகர் செம குஷியில் உள்ளார். நடிகர் தனது கட்சி மேடைகளில் பஞ்ச் டயலாக் பேசி தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
புலம்பல்: எளிய மக்களின் அரசியல் செய்ய வேண்டும் என்றால் களத்திற்கு வர வேண்டும், ஆனால் நடிகரோ எலைட் மக்களின் அரசியல் செய்வதால் கேரவனில் இருந்து இன்னும் கீழே இறங்காமல் இருக்கிறார் என பலரும் விமர்சித்து வருகிறார்கள். நடிகர் மனதில் இப்போது உள்ள பிரச்னை என்னவென்றால், அது, அவரது அரசியல் அல்லக்கைகள் குறித்துதானாம். அவர்கள் அவிழ்த்துவிடும் புளுகு மூட்டைகள் எல்லாவற்றிகும் எதிர்க்கட்சியினர் இவரைப் போட்டு தாளித்து எடுப்பதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் நடிகர் திணறி வருகிறாராம். மேலும் இவரும் எதுவும் செய்ய மாட்டேன் என்கிறார், நம்மையும் இறங்கி அடிக்கவும் விடமாட்டிங்கிறார் என தங்களுக்குள் பேசி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











