நடிகருடன் ஓவர் நெருக்கம்.. காதலனுக்கு பணத்தை கொடுத்து சமாதானப்படுத்தும் நடிகை.. காரணம் இல்லாமலா?
சென்னை: இந்த நடிகை தென்னிந்தியாவில் டாப் நடிகைகளில் ஒருவராக உள்ளார். ஆண்டுக்கு இவரது நடிப்பில் மட்டும் குறைந்தது நான்கு முதல் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகி விடுகிறது. நடிகை படத்திற்கு படம் சம்பளத்தை ஏத்திக் கொண்டு போகிறாராம். நடிகையின் நேரம், நன்றாக இருப்பதால் நடிகை நடிக்கும் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளது. இப்படியான நிலையில் நடிகை தற்போது தனது சம்பளத்தை பெரும்பாலும் தனது காதலனுக்கு கொடுத்து வருகிறாராம்.
நடிகை கடந்த சில ஆண்டுகளாகவே, ஒரு நடிகருடன் டேட்டிங்கில் இருந்தார். அதன் பின்னர் அது காதலாக மாற, இருவரும் தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். இவர்கள் காதலிக்கிறார்கள் என ஊரு உலகத்திற்கே தெரிந்தாலும் நடிகையும் நடிகரும் இன்னும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் நடிகை தனது படங்களின் புரோமோஷன்களின்போது, நடிகர் குறித்து மறைமுகமாகவோ, அல்லது அவரது பெயரைச் சொல்லாமல் தனது காதல் குறித்து பேசி, தனது படத்தை பார்க்க, நடிகரின் ரசிகர்களையும் இழுத்து விடுகிறார்.
நடிகை தான் கடைசியாக நடித்த படத்தில் அவருடன் நடித்த நடிகருடன் கொஞ்சம் ஓவர் நெருக்கமாக மாறிவிட்டார் என கூறப்படுகிறது. நடிகருடன் நடிகையும் சேர்ந்து அடித்த கும்மாளம் இயக்குநரை கோபப்படுத்தி உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? தொடக்கத்தில் இருவரும் கேரவனில்தான் அதிக நேரம் செலவழித்து உள்ளார்கள். ஆனால் ஷாட் ரெடி நடிகரை வரச்சொல்லுங்க, நடிகையை வரச்சொல்லுங்க என்றால், இருவரும் எல்லாவற்றையும் முடித்துவிட்டு வர ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டார்களாம். இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான இயக்குநர் நடிகரை விட்டு விளாசியுள்ளார்.

ஓவர் நெருக்கம்: அதன் பின்னர் நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையில் மோதல் ஏற்பட, நடிகர் பல நாட்கள் படப்பிடிப்புக்கு வருவதாக கூறிவிட்டு செல்லாமல் இருந்துள்ளார். அதேபோல் நடிகையையும் செய்யச் சொல்லி உள்ளார். இவர்களின் இந்த நெருக்கத்தை படத்தில் அப்பட்டமாக காட்டி, இவர்களின் பெயரை டேமேஜ் செய்ய நினைத்த இயக்குநரின் பிளான் சக்சஸ் ஆகிவிட்டது. படம் ரிலீஸ் ஆன பின்னர் நடிகரையும் நடிகையும் பலரும் இயக்குநர் நினைத்ததைப் போல பேசினார்கள்.
பயம்: இப்படியான நிலையில் இந்த பேச்சுகளால் மனம் நொந்துபோன, நடிகையின் காதலன் தற்போது செம அப்செட்டாக இருந்துள்ளார். இதனால் காதலர் தன்னைவிட்டுப் பிரிந்துவிட்டால், மொத்த திரையுலகமும் நடிகருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்து பேச ஆரம்பித்துவிடுவார்கள் என்ற பயத்தால் காதலனிடம் உருகி உருகி பேசி, ஒரு அளவிற்கு சமாதானம் செய்துள்ளார் நடிகை.
சம்பளம்: இது மட்டும் இல்லாமல் நடிகர் தற்போது படம் ஒன்றையும் தயாரித்து வருகிறாராம். இதனால் நடிகை, நடிகரின் தயாரிப்புக்கு தனது சம்பளத்தை பெருமளவிற்கு கொடுத்து உதவி வருகிறாராம். இதனால் காதலன் தற்போது, இந்த படத்தை முடிக்க கட்டாயம் நடிகையின் தயவு தேவை, இல்லை என்றால் பெருமளவில் கடனாகிவிடும் என அமைதியாக உள்ளாராம். நடிகையின் சம்பளம் எல்லாம் காதலனான நடிகருக்கு போவதை தெரிந்து கொண்ட குடும்பத்தினர், இந்த காதல் கைகூடவில்லை என்றால் என்ன செய்வாய்? ஏன் பணத்தை இப்படி கொண்டுபோய் கொட்டுகிறாய் எனக் கேள்வி கேட்டு வருகிறார்களாம். ஆனால், நடிகைக்கு உள்ள சிக்கல் நடிகைக்கு தான் தெரியும்..


Click it and Unblock the Notifications











