பெரிய நடிகர் மகளை சீரழித்த உறவினர்கள்.. நடிகர் கப்சிப்.. அப்பறம் என்ன நடந்துச்சு?
சென்னை: பெண்களுக்கு அவரவர் சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி இப்போதும் உலா வருகிறது. தங்களை மிகவும் கடுகடுப்பானவராக காட்டிக் கொள்ளும் பெண்களிடம் இவ்வாறு இருக்க காரணம் என்னவென்று கேட்டால், இப்படி கடுகடுப்பாக இருப்பதால்தான், ஆண்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடிகிறது என்று பதில் தருகிறார்கள். அந்த அளவிற்கு பெண்களுக்கான பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இப்படியான நிலையில், பெரிய நடிகரின் மகளுக்கு அவரது குழந்தை பருவத்தில் உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள். இது பலருக்கும் அதிச்சியைக் கொடுத்துள்ளது.
சினிமா உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும், அவர்களை அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைப்பதும் தற்போது வரை நடைபெற்று வருகிறது. தன்னை அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்தார்கள், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள் எனக் கூறும் நடிகைகள் தங்களுக்கு யார் பாலியல் தொல்லை கொடுத்தார்கள், தங்களை யார் அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்தார்கள் என்பதை மட்டும் சொல்லாமல் தவிர்த்துவிடுகிறார்கள். இது பெரும் சர்ச்சையாக மாறுகிறது.

நடிகைகள்: மலையாள சினிமாவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி தலைமையில் சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டு, சில நடிகர்கள், இயக்குநர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது மட்டும் இல்லாமல், மலையாள நடிகர் சங்கம் முழுவதும் கலைக்கப்பட்டது. தலைமைப் பொறுப்பில் இருந்த நடிகர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க முயற்சி செய்தார். ஆனால் செய்தியாளர் சந்திப்பு பெரும் வாக்குவாதத்தில் முடிந்தது.
பாலியல் வன்கொடுமை: இப்படியான நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இருப்பவரின் மகள், அவரது குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லையை அனுபவித்துள்ளார் என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இது தொடர்பாக அவரது மகள் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்போது அவர் அழுது கொண்டே பேசியதால் பெரும் சர்ச்சையாக இந்த விஷயம் உருவெடுத்துள்ளது.
நடிகரின் மகள்: அதாவது தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை தனது குழந்தைப் பருவத்தில் தனது பெற்றோர்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள். அப்போது பெரும்பாலும் என்னை உறவினர்கள் வீட்டில் தான் விட்டுச் செல்வார்கள். அப்போது என்னை ஐந்து முதல் ஆறு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் என அழுது கொண்டே கூறினார். பெரிய நடிகரின் மகளே இவ்வாறு கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் தனக்கு நடைபெற்ற இந்த பாலியல் வன்கொடுமை குறித்து கூறும்போது அந்த நடிகை அழுது கொண்டே இருந்தார். மேலும் குழந்தைகளுக்கு குட் டச் மற்றும் பேட் டச் குறித்து சொல்லிக் கொடுங்கள் எனவும் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











