நடிகையிடம் இயக்குநரின் சில்மிஷ வேலை.. படம் மட்டும் அப்படி இப்படி இல்ல.. ஆளே அப்படித்தான் போல..
ஹைதராபாத்: இணையம் வளர்ந்த பின்னர், இப்போது எல்லாம் நடிகைகள் கொஞ்சம் தைரியமாகவே செயல்படுகிறார்கள் எனலாம். குறிப்பாக தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் குறித்து மிகவும் ஓப்பனாக பேசுகிறார்கள். இதனாலோ என்னவோ சில சில்மிஷ இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் பொத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், சிலர் நம்மை மீறி என்ன நடந்துவிடும் என்ற எண்ணத்தில் மிகவும் மோசமாக, நடிகைகளிடம் அல்லது சினிமாவில் பணியாற்றும் பெண்களிடம் நடந்து கொள்கிறார்கள். அந்த விஷயங்களும் அவ்வப்போது வெளியே வந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலை என்பது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்ற வேறுபாடு இல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் நடக்கும் பிரச்னையாக உள்ளது. அப்படியான சம்பவம் குறித்து தான், தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னதாக, நடன இயக்குநர் ஒருவர், அவரது நடனக் குழுவில் இருந்து மிகவும் இளம் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்தது வெளியே தெரிந்தது, குறிப்பாக அந்த பெண் நடனக் கலைஞர் மைனராக இருந்த போதே, அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். எனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார், அந்த நடன இயக்குநர். இப்படியான நிலையில் தற்போது தெலுங்கு பட இயக்குநரின் நாசவேலை குறித்து பரபரப்பாக பேசி வருகிறார்கள்.

பாலியல் தொல்லை: இந்த இயக்குநர் கொஞ்சம் வில்லங்கமான ஆள் என்பதை விட, மிகவும் விவகாரமானவர் என்பதுதான் சரியாக இருக்கும். அதாவது, இந்த இயக்குநர் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் படம் எடுத்துள்ளார். இவர் எடுத்த இரண்டு படங்களும் வணிக ரீதியாக பெரும் வெற்றிப் படமாக மாறியது. விமர்சன ரீதியாக இந்த படங்கள் குறித்து மிக மோசமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. அதாவது, இவர் இயக்கிய படங்களில் அதிகமாக இருந்த காட்சிகள் என்றால் பெட்ரூம் காட்சிகள் தான்.
சில்மிஷ இயக்குநர்: இதில் இவர் இயக்கிய தெலுங்கு படத்தில் இருந்த காட்சிகள் எல்லாம், நெருக்கமான காட்சிகள் என்பதைக் காட்டிலும் ஆபாசக் காட்சிகள் என்று விமர்சித்தவர்களும் உள்ளார்கள். இந்த தெலுங்கு படத்தில் ஒரு இளம் நடிகையை நடிகையாக அறிமுகம் செய்துள்ளார். நடிகை அப்போதுதான் 20 வயதைக் கடந்தவராக இருந்துள்ளார். ஒரு காட்சி படமாக்கப்பட்ட பின்னர், நடிகை கேரவனுக்கு சென்றுள்ளார். அதன் பின்னர், கேரவனுக்குள் இருந்த தனது உதவியாளர்களை வெளியே அனுப்பியுள்ளார்.
மானமே போச்சு: நடிகையை முதல் நாளில் இருந்தே நோட்டம் விட்டுக் கொண்டு இருந்த இயக்குநர், நடிகையின் உதவியாளர்கள் கேரவனில் இருந்து வெளியே வருவதை கவனித்துள்ளார். இதுதான் சந்தர்ப்பம், என நினைத்த இயக்குநர் நேரடியாக கேரவனுக்குள் சென்றுள்ளார். அப்போது நடிகை ஆடைகளை கழற்றிக் கொண்டு, உள்ளாடைகளுடன் இருந்துள்ளார். இயக்குநரை கொஞ்சமும் எதிர்பார்க்காத நடிகை, இயக்குநரை கண்டபடி திட்டி வெளியே அனுப்பியுள்ளார். நடிகையை கைவசப்படுத்திவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த இயக்குநர் அசிங்கப்பட்டதை படப்பிடிப்புத் தளத்தில் இருந்த பலரும் பார்த்துள்ளார்கள். இந்த விஷயம் அப்போது வெளியாகவில்லை என்றாலும், இப்போது வெளியாகி இயக்குநரின் மானம் கப்பலேறி வருகிறது. விபரம் தெரிந்தவர்கள், இயக்குநரின் படம் மட்டும் அப்படி இப்படி இல்லை, இயக்குநரே வக்கிரபுத்தி கொண்டவர்தான் என பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











