»   »  சண்டை போட்டுக்கொள்ளும் இரண்டு முன்னணி காமெடியன்கள்!

சண்டை போட்டுக்கொள்ளும் இரண்டு முன்னணி காமெடியன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆர்ஜே காமெடியனுக்கும் நீச்சல் காமெடியனுக்கும் முட்டிக்கொண்டதால் இருவரும் இணைந்து நடிப்பதைத் தவிர்க்கிறார்களாம்.

ஆர்ஜேவாக இருந்து எல்லோரையும் கலாய்த்து காமெடியன் ஆனவர் அந்த திருப்பதி கடவுள் பெயர் கொண்டவர். சிவ நடிகரின் ஆரம்பகால படங்களில் நடித்து தளபதி நடிகருடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்தவர் அந்த மூன்றெழுத்து காமெடியன். இருவரும் சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டனர்.

Clash between comedians

ஆர்ஜேவிடம் சிறந்த காமெடியன் யார்? என்று கேட்க இவரின் பெயரைச் சொல்லி கிண்டல் ஸ்மைலி போட்டதால் கடுப்பான இந்த நடிகர், பதிலுக்கு ஆமா, நீங்க ஜல்லிக்கட்டு போராட்டத்துல பண்ணாத காமெடியா? என்று வாரிவிட்டார். அதிலிருந்தே இருவருக்குமிடையே பனிப்போர் செல்கிறதாம். இருவரையும் இணைத்து வைத்து கதை சொல்ல வரும் இயக்குநர்களை இருவருமே தவிர்க்கிறார்களாம்.

சமீபத்தில் யோகமான காமெடியன் தேதி கிடைக்காததால் மூன்றெழுத்து காமெடியனை புக் செய்திருந்தார் ஒரு இயக்குநர். உள்ளே புகுந்த திருப்பதி கடவுள் யோகமான காமெடியின் தேதி வாங்கி கொடுத்து இவரது பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளார்.

காமெடி மட்டும் தான் வர மாட்டேங்குது... மத்த வில்லத்தனமெல்லாம் நல்லாத்தான் வருது!

Read more about: gossip கிசுகிசு
English summary
There is a clash between that RJ comedian and swimming film comedian are and both are avoiding to act together.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X