தலைவருக்கும் செயலாளருக்கும் முட்டிக்கிச்சாம்ல?
தமிழ் சினிமாவின் முக்கிய சங்கமான முதலாளிகள் சங்கத்தில் செம ஆக்டிவாக இருக்கும் இளம் தலைவருக்கும் அந்த சங்கத்தின் செயலாளரான பசுமை தயாரிப்பாளருக்கும் முட்டிக்கொண்டது என்று சொல்கிறார்கள்.
செயலாளர் சமீபத்தில் ஒரு படத்தை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்த்தார். ஆனால் படத்தை விமர்சகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். காரணம் படம் முழுக்க இரட்டை அர்த்த மற்றும் நேரடி ஆபாச வசனங்கள். அடல்ட் படம் என்று சொல்லி எடுக்கப்பட்டிருந்தாலும் அந்த படத்தின் மூலம் ருசி கண்டவர் சும்மா இருப்பாரா? அதே மாதிரி வரிசையாக படங்கள் எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நீங்களே இப்படி செய்வது தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என்று தலைவர் நேரடியாகவே அட்வைஸ் செய்திருக்கிறாராம்.
இதன் விளைவாக இருவருக்கும் இடையே பனிப்போர் தொடங்கியிருக்கிறதாம்.
Comments


Click it and Unblock the Notifications