»   »  சொந்தத் தயாரிப்பில் 'காஸ்ட்லி' ஹீரோவாக மாறிய சங்கத்தலைவர்!

சொந்தத் தயாரிப்பில் 'காஸ்ட்லி' ஹீரோவாக மாறிய சங்கத்தலைவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கத் தலைவர் சொந்தமாகத் தயாரித்து வரும் படம் 30 சியைத் தாண்டியதுதான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக்.

காமெடியில் அறிமுகமாகி ஹீரோவாக முன்னேறிய நடிகருக்கு, கடைசியாக வெளியான கடவுள் படம் ஏகப்பட்ட சோதனைகளைக் கொடுத்து விட்டது.

இதனால் படம் வெற்றி பெற்றாலும் கூட பழைய கஷ்டங்களை மனதில் வைத்து இனிமேல் சொந்தத் தயாரிப்புதான், என்று களத்தில் குதித்திருக்கிறார்.

இந்நிலையில் சொந்தத் தயாரிப்பில் நடிகர் நடித்து வரும் படத்தின் பட்ஜெட் 30 சியைத் தாண்டி விட்டதாம். இதனால் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து படத்தைத் தயாரிக்கும் நடிகர், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பலமுறை யோசித்தே முடிவு செய்கிறாராம்.

மேலும் போட்ட பட்ஜெட்டை எடுக்கும் வழிமுறைகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறாராம். இது தவிர மேலும் 3 படங்களையும் நடிகர் சொந்தமாகத் தயாரிக்க இருப்பதால் இப்படத்தின் வசூலை அதிகரிக்க சில பல நகாசு வேலைகளையும் செய்யத் தொடங்கியிருக்கிறாராம்.

முதற்கட்டமாக சங்கத் தலைவியை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். இப்படித்தான் சங்கத் தலைவராக நடித்த படத்தில் வளர்ந்து வந்த ஒரு நடிகையை அடுத்த படத்தில் வாய்ப்புத் தருகிறேன் என்று நடிக்க வைத்தார்.

அந்த நடிகை தற்போது அட்ரஸ் இல்லாமலே போய்விட்டார் என விஷயமறிந்தவர்கள் கிண்டலடிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

மற்றொருபுறம் இவ்வளவு பணத்தை சொந்தத் தயாரிப்பில் போட முன்னணி நடிகர்களே யோசிக்கும்போது, இவர் இவ்வளவு செலவு செய்கிறாரே? என வியக்காதவர்களும் இல்லை.

English summary
Sources said Club Hero Movie Budget Crossed more than 30 Crores.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil