»   »  'ரகசியமா வச்சுக்க முடியாதா' இயக்குநர் மீது கடுப்பான கோட் நடிகர்

'ரகசியமா வச்சுக்க முடியாதா' இயக்குநர் மீது கடுப்பான கோட் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டியல் இயக்குநரின் சரித்திரப் படத்தில், தான் நடிக்கவிருந்த செய்தி வெளியான விவகாரத்தால், இயக்குநர் மீது ஏகக் கடுப்பில் இருக்கிறாராம் அந்த கோட் நடிகர்.

கோட் நடிகர் தற்போது வீரமான இயக்குநரின் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பட்டியல் இயக்குநரின் அடுத்த படத்திற்குத் தான் கால்ஷீட் ஒதுக்கியிருந்தாராம்.

ஆனால் அடுத்து தான் நடிக்கப் போவது சரித்திரப் படமென்பதை ரகசியமாக வைக்க சொல்லி இயக்குநருக்கு உத்தரவு போட்டிருந்தாராம்.

இயக்குநர் என்ன நினைத்தாரோ நடிகரின் சரித்திரப் படம் பற்றிய விவகாரம் எல்லா பத்திரிக்கைகளிலும் வெளியாகி விஷயம் பரவி விட்டது.

இதனால் தற்போது அந்த இயக்குநர் மீது நடிகர் எக்கச்சக்க கோபத்தில் இருக்கிறாராம். நடிகரின் கோபத்தால் திட்டமிட்டபடி படம் தொடங்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறதாம்.

ஆனால் நடிகரின் இந்தக் கோபத்திற்கு, இயக்குநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வெளியாகவில்லை, என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எவ்வளவோ பார்த்துட்டோம்...

English summary
Sources Said Coat-Suit actor Angry on List Director. Regarding His Next Movie Details Leaked Issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil