இன்னும் அந்த சண்டை சரியாகலையாம்.. ஒல்லி நடிகரின் கண்டிஷனுக்கு ஓகே சொல்லாத இசையமைப்பாளர்!

By Staff

சென்னை: ஒல்லி நடிகரும் அவர் அறிமுகத்தில் சினிமாவுக்கு வந்த அந்த இசையமைப்பாளருக்கும் இடையே இன்னமும் பிரச்சனை ஓடிக் கொண்டு தான் இருக்கிறதாம்.

சமீபத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து விட்டனர். இருவரது கூட்டணியில் அட்டகாசமான பாடல் வருகிறது என அளந்து விடப்பட்ட நிலையில், பாடல் வெளியாகும் போதே அவர்களது பஞ்சாயத்தும் பட்டித் தொட்டி எங்கும் பரவ ஆரம்பித்து விட்டது.

மீண்டும் இணைந்த இரு நண்பர்களும் ஏன் ஒன்றாக காட்சித் தரவில்லை என்கிற கேள்விக்கு அது தான் காரணம் என்கின்றனர்.

விதை போட்டது யாரு

விதை போட்டது யாரு

தொட்டதெல்லாம் பொன்னாக மாற்றும் திறமையுடன் இப்போதைக்கு கோலிவுட்டில் நான் தான் ராஜா என யங் இசையமைப்பாளர் அட்ராசிட்டி செய்து வருகிறார். அவர் இசையமைக்கும் இசை பலவும் ஹாலிவுட் இசையில் இருந்து உருவப்பட்ட இசை தான் என காப்பி கேட் சர்ச்சைகள் கிளம்பினாலும், இப்போதைக்கு இங்கே அவரை அடித்துக் கொள்ள ஆளில்லாத நிலையில், ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால், இதற்கெல்லாம் விதை போட்டது அந்த ஒல்லி நடிகர் தான்.

வளர்த்த கடா

வளர்த்த கடா

ஒல்லி நடிகர் உருவாக்கிய இரு பிரபலங்களும் வளர்ந்த பின்னர் வளர்த்த கடா மார்பில் பாய்வது போல பாய்ந்து விட்டனர் என்கிற கோபம் தான் அந்த ஒல்லி நடிகருக்கு.. ஆனால், தனது பெயரையே கெடுக்க காரணமாக இருந்து விட்டார் அந்த ஒல்லி நடிகர் என்கிற கோபத்தில் தான் அந்த யங் இசையமைப்பாளரும் உங்க சகவாசமே வேண்டாம் என ஒதுங்கி விட்டாராம்.

சமாதான பேச்சுவார்த்தை

சமாதான பேச்சுவார்த்தை

மீண்டும் எப்படியாவது பழையபடி ஹிட் கொடுக்க வேண்டும் என நினைத்த அந்த இயக்குநர் பண்ண பஞ்சாயத்து காரணமாக ஒல்லி நடிகர் படத்தில் ஒர்க் பண்ண அவர் சம்மதித்துள்ளார். ஆனால், ஆரம்பத்திலேயே அவரை மீண்டும் அசிங்கப்படுத்துவது போலத்தான் புரமோ வெளியிட வேண்டும் என்று ஒல்லி நடிகர் சொன்னதில் இருந்தே இவர் இன்னமும் திருந்தவில்லை என நினைத்து விட்டாராம் அந்த இசையமைப்பாளர்.

மீண்டும் பிரச்சனை

மீண்டும் பிரச்சனை

இருவரும் ஒன்றாக இணைந்து விட்டனர். பழையபடி பிளாக்பஸ்டர் பாடல்கள் வரப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்க்க, இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை நடைபெற்று வரும் சங்கதி தான் தெரிய வந்திருக்கிறது. நடிகர் மீது இருந்த கோபத்தில் ஏதோ படு மொக்கையாக ஒரு மியூசிக்கையும் போட்டுத் தள்ளி இருக்கிறார் அந்த இளம் இசையமைப்பாளர். இருவரையும் ஒன்றாக எப்படியாவது காட்டிவிடலாம் என இயக்குநர் நடத்திய போராட்டம் கடைசியில் வீணாக போய் விட்டதாம்.

அந்த கண்டிஷன்

அந்த கண்டிஷன்

அதற்கு காரணம் ஒல்லி நடிகர் போட்ட அந்த கண்டிஷன் தான் என்கின்றனர். இனிமேல் என்னோட ஒர்க் பண்ணு அந்த் இளம் மாஸ் ஹீரோவுக்கு ஒர்க் பண்ணக் கூடாது என்கிற கண்டிஷன் தான் என்கின்றனர். அதுமட்டுமின்றி ஒல்லி நடிகருக்கும் இசையமைப்பாளருக்கும் பாலமாக இருந்தவரையே ஒல்லி நடிகர் பிரிந்து வந்த நிலையில், அவருக்கும் இவருக்கும் இன்னமும் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X