நடிகைகளுடன் ஜாலியாக கடலை போடும் பரோட்டா: கடுப்பில் ஹீரோக்கள்?
சென்னை: படப்பிடிப்பு தளத்தில் பரோட்டா நடிகர் நடிகைகளுடன் கடலை போடுகிறாராம்.
மோக்கியா நடிகர் தான் நகைச்சுவை நடிகர்களில் உச்சத்தில் இருந்தார். அவருக்காக காத்திருந்து படம் எடுக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. இந்நிலையில் அவர் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதையடுத்து பரோட்டா நடிகருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன.
இந்நிலையில் மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு மோக்கியா திரும்பியுள்ளார். மோக்கியா படப்பிடிப்பு தளத்தில் ஹீரோயின்களை கலாய்த்து எடுத்துவிடுவார். ஆனால் பரோட்டாவோ ஜாலியாக பேசி கடலை போடுகிறாராம்.
அவர் இப்படி நைசாகப் பேசி கடலை போடுவதை பார்த்து சில ஹீரோக்கள் வயிற்றெரிச்சலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications