சக நடிகர் மீது பொறாமையில் இருக்கும் பிரபல நகைச்சுவை நடிகர்
சென்னை: நகைச்சுவை நடிகர் ஒருவருக்கு சக நடிகர் மீது பொறாமை இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
பிரபல நகைச்சுவை நடிகர் அவர். தற்போது அவரின் மார்க்கெட் சுமாராகத் தான் உள்ளது. அவர் நடிப்பில் அண்மையில் வெளியான படங்களில் அவர் காமெடி செய்கிறேன் என்ற பெயரில் கடுப்பேற்றியது தான் மிச்சம்.
மேலும் மனிதர் அநியாயத்திற்கு விளம்பர பிரியராக மாறியுள்ளார்.

நல்ல காரியம்
நிஜ வாழ்க்கையில் அவர் நிறைய நல்ல விஷயங்களை செய்கிறார். மேலும் தன்னை போன்றே மற்றவர்களையும் நல்ல காரியங்கள் செய்ய ஊக்குவிக்கிறார். அதற்காக அவரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் அந்த நல்ல விஷயங்கள் மூலம் கூட விளம்பரம் தேடுவது போன்று உள்ளது அவரின் நடவடிக்கைகள்.

பொறாமை
நகைச்சுவை நடிகருக்கு சக நடிகர் ஒருவர் மீது பொறாமை இருப்பது அவரின் செயல்கள் மூலம் தெரிகிறது. சக நடிகர் ஒருவர் படங்களில் செய்த நல்ல விஷயத்தை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் சார், பார்த்தீங்களா நீங்கள் சொல்லத் தான் செய்கிறீர்கள், எங்கள் தலைவர் எப்பொழுதோ செய்தே காட்டிவிட்டார் என்று கூறி அந்த நகைச்சுவை நடிகரை டேக் செய்து சமூக வலைதளத்தில் கருத்து தெரவித்தனர். நடிகரோ அதை கண்டுகொள்ளவே இல்லை.

ரசிகர்கள்
பிற நடிகர்களின் ரசிகர்கள் செய்யும் நல்ல காரியங்களை பாராட்டும் இவர் அந்த குறிப்பிட்ட நடிகர் பற்றிய விஷயங்களை மட்டும் பார்த்தும் பார்க்காதது போன்று உள்ளார். சக நடிகருக்கு மார்க்கெட் நிலவரம் படுமோசமாக இருந்தாலும் ரசிகர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவரை கொண்டாடுகிறார்கள். அது தான் அந்த நகைச்சுவை நடிகருக்கு பிடிக்கவில்லை போன்று.

விளம்பரம்
நகைச்சுவை நடிகர் சமூக வலைதளங்களில் போடும் போஸ்ட்டுகளில் பலவற்றை பார்த்தால் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் தான் வருகிறது. எப்படி இருந்த மனிதர் இப்படி விளம்பர பிரியராகிவிட்டாரே என்று விமர்சிக்கிறார்கள். நடிகர் விளம்பரம் தேடுவதில் காட்டும் ஆர்வத்தை நல்ல காரியங்களில் மட்டும் காட்டினாலே அவர் பெயர் எட்டுத்திக்கும் பரவும் என்பது அவருக்கு ஏனோ புரியவில்லை. இவர் மட்டும் அல்ல இளம் நகைச்சுவை நடிகர் ஒருவரும் விளம்பரம் தேட பேயாக அலைகிறார்.


Click it and Unblock the Notifications











