கேரவனில் நடிகர் செய்த அசிங்கமான வேலை... சோலியை முடித்துவிட்ட நடிகை!

By Staff

சென்னை: முன்பெல்லாம் சினிமாவில் மட்டும் தான் அட்ஜஸ்ட்மென்ட் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது, வெளியாகி இருக்கும் சீரியல் நடிகையின் வீடியோவை பார்க்கும் போது, சின்னத்திரையிலும் அட்ஜஸ்ட்மென்ட் இருப்பது தெரியவந்து பலரையும் திகைப்பில் ஆழ்த்தி உள்ளது. ஒரு சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக்கொண்டு பட வாய்ப்பை பெறுகிறார்கள். சில நடிகைகளோ அட்ஜஸ்ட்மென்ட்க்கு நோ சொல்லிவிட்டு நேர்மையாக தனது திறமையின் மூலம் முன்னுக்கு வருகிறார்கள். அப்படி தன்னுடைய திறமையால் முன்னுக்கு வந்த நடிகை ஒருவர் கேரவனில் அத்துமீறி நடந்து கொண்ட காமெடி நடிகரின் சோலியை முடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் அந்த மூத்த நடிகை. முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் அந்த நடிகை. அதன் பின் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்தது தொடர்ந்து, தெலுங்கு சினிமாவிற்கு சென்று நல்ல பெயரை எடுத்தார்.

Gossip actress

சிக்னல் காட்டினார்: அதன்பின் அவருக்கு திருமணமாகிவிட, சினிமாவில் இருந்து விலகி இருந்த அந்த நடிகை, குழந்தைகள் வளர்ந்து விட்டதால், மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து, அக்கா, அம்மா, அண்ணி என துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது அந்த நடிகைக்கு 50 வயது ஆகியிருக்கும் நிலையில், நகைச்சுவை நடிகர் ஒருவர் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது குறித்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். அந்த பேட்டியில், காமெடி நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னிடம் சிக்னல் காட்டி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார்.

கேரவனில் நடந்தது என்ன: அந்த நேரம் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இந்த வயதிலும் அட்ஜஸ்ட்மென்டா என்று கலங்கிப்போனேன். அந்த நேரத்தில் நான் ஏதாவது கோவப்பட்டு இருந்தால், படப்பிடிப்பு நின்று போய்விடுமே என நினைத்து, எதுவாக இருந்தாலும், நாம் ஷூட்டிங் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அமைதியாக இருந்துவிட்டேன். படிப்பிடிப்பு முடிந்த பின், அந்த நடிகரை கேரவனுக்கு வர சொன்னேன். கேரவனுக்கு வந்த அந்த நடிகர், நான் எப்படியும் ஓகே சொல்லிவிடுவேன் என நினைத்துக்கொண்டு இருந்தார்.

Gossip actress

அசிங்கமா இல்லையா: அப்போது நான், உங்களுக்கு ஏதேனும் சிக்னல் கொடுத்தேனா, இல்லை உங்களிடம் தவறாக நடந்து கொண்டேனா என்று கேட்டேன். அதற்கு அந்த நடிகரோ இல்லை என்றார். அப்படி நான் எதுவும் செய்யவில்லை என்றால், நீங்கள் ஏன் என்னிடம் இப்படி அசிங்கமாக நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் என்னிடம் நடந்து கொண்டது தவறு, ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறீர்கள். இது உங்களுக்கே அசிங்கமாக தெரியவில்லையா? என்று கேட்டு விட்டு, இதற்கு மேலும், என்னிடம் இப்படி ஏதாவது தவறாக நடந்துகொண்டால், மரியாதை கேட்டுவிடும் என்று சொல்லிவிட்டு கேரவனில் இருந்து வந்துவிட்டேன். இதுபோல எல்லா நடிகைகளுக்கும் எந்த வயதில் வேண்டுமானாலும் நடக்கும். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், வாய்ப்பு போய்விடுமே என்று நினைக்காமல், அந்த நபருக்கு சரியான பதிலடி கொடுத்து விட்டால் யாரும் நம்மிடம் வாலாட்ட மாட்டார்கள் என்றார் அந்த நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X