சான்ஸ் வேணுமா எங்கிட்ட வாங்க.. யங் ஹீரோயின்களுக்கு வலை வீசும் காமெடி நடிகர்.. சிக்கினா அவ்வளவுதான்?

By Staff

சென்னை: திரையுலகில் வாய்ப்பே இல்லாமல் அவதிப்பட்டு வரும் இளம் நடிகைகளை டார்கெட் செய்து ஹீரோயினாக மாற்றி வருகிறாராம் அந்த காமெடி நடிகர். யங் ஹீரோயின்களுக்கு தற்போது வாய்ப்பு தருகிறேன் என்கிட்ட வாங்க என பிரைவேட்டாகவே அழைத்து படத்தில் வாய்ப்பு கொடுத்து வருகிறாராம்.

இன்ஸ்டாகிராமில் இளம் சிட்டுக்கள் போடும் போட்டோக்கள் பிடித்து விட்டால் போதுமாம் உடனடியாக அந்த நடிகைகளுக்கு போன் போட்டு பேச ஆரம்பித்து அவர்களுக்கு பக்காவாக வலையும் விரித்து விடுகிறாராம்.

Gossip Kollywood

தொடர்ந்து தனது படங்களுக்கு ஏகப்பட்ட இளம் நடிகைகளை சமீபத்தில் கரெக்ட் செய்து நடித்து வரும் காமெடி நடிகர் அந்த நடிகைகளுடன் தனிப்பட்ட நட்பையும் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

காமெடி நடிகர்: முன்னணி காமெடி நடிகர்கள் எல்லாம் இல்லாத வெற்றிடத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு காமெடி நடிகராக மாறி கலக்கி வருகிறார் அந்த நடிகர். சாதாரணமாக வாழ்ந்து வந்த அந்த நடிகர் இப்போ ஒரு படத்துக்கு பல கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு மாஸ் காட்டி வருகிறார்.

ஹீரோ ஆகிட்டாரு: காமெடியில் உச்ச நட்சத்திரமாக கலக்கி வரும் போது திடீரென ஹீரோ வாய்ப்பு வர அதையும் ஏன் விடுவானேன்னு இமிடியேட்டா ஹீரோவாகவும் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். ஏகப்பட்ட தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி படம் கிடைத்தால் உடனடியாக ஓகே சொல்லி புக் செய்து விடுகிறாராம். கடைசி நேரத்தில் இந்த படத்தில் பிஸி, அதில் பிஸி என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி சாக்கு போக்கு சொல்லி நடித்து வருகிறார் என்கின்றனர்.

ரொம்ப உஷார்: மற்ற காமெடி நடிகர்கள் ஹீரோ ஆன பின்னர் காமெடியனாக மீண்டும் நடிக்க மாட்டேன் என அடம் பிடிப்பார்கள். ஆனால், ஹீரோ எல்லாம் தற்காலிகம் தான் நமக்கு எப்போவுமே காமெடியன் ரோல் தான் சோறு போடும் என நினைத்து உஷாராக எந்த ரோல் கிடைத்தாலும் நடிப்பேன் எனக் கூறி வருகிறார் அந்த நடிகர்.

இளம் நடிகைக்கு வலை: தனக்கு ஜோடியாக டாப் ஹீரோயின்கள் நடிக்க மாட்டார்கள் என்பதை புரிந்துக் கொண்ட காமெடி நடிகர் நல்லா செவத்த புள்ளையா இளம் நடிகைகள் யாரெல்லாம் இருக்காங்களோ, இன்ஸ்டாகிராமில் அதிகமாக ரீல்ஸ் போட்டு வராங்களோ, அவர்களை எல்லாம் தனக்கு ஜோடியாக மாற்றி வருகிறார்.

சான்ஸ் வேணுமா சான்ஸ்: யங் ஹீரோயின்கள் காமெடி நடிகராக இருந்தால் என்ன பட வாய்ப்பு கிடைக்கிறதே என போட்டிப் போட்டு அந்த நடிகருடன் நடிக்க ஓகே சொல்லி வரும் நிலையில், சில பல அட்ஜெஸ்ட்மெண்டுகளையும் அந்த காமெடி நடிகர் கேட்கிறாராம். அதற்கு ஓகே சொல்லும் நடிகைகளுக்கு மட்டுமே சான்ஸ் என பகீர் கிளப்புகின்றனர். இவரும் இப்படி ஆகிட்டாரா? என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X