காமெடி நடிகர் பண்ண டார்ச்சர்.. கம்பியை நீட்டிய ஊழியர்.. இது என்ன புது டிசைனா இருக்கே!
சென்னை: நல்ல சம்பளம் கொடுத்து ஊழியர்களை வைத்திருக்கும் பிரபலங்களையே நைஸாக ஏமாற்றி தனியாக சொத்து சேர்க்கும் ஊழியர்கள் குறித்த தகவல்கள் சமீபத்தில் அம்பலம் ஆனதும் பல பிரபலங்களும் ஒரு பக்கம் அலர்ட் ஆகி வருகின்றனர்.
நிலைமை இப்படி போய்க் கொண்டிருக்க இன்னொரு பக்கம் தனது ஊழியருக்கு செம டார்ச்சர் கொடுத்து ஓட வைத்திருக்கிறாராம் அந்த பிரபல காமெடி நடிகர்.
உதவின்னு ஒருத்தர் வந்தாலும் உதவ முடியாதுன்னு மறுத்து வரும் அந்த நடிகர் தனது ஊழியருக்கே பல மாதங்களாக சம்பளம் பாக்கி என பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.

கடைந்தெடுத்த கஞ்சன்
கோடிக் கணக்கில் சம்பாதித்தாலும் சக நடிகர்களுக்கு சம்பளம் தருவதில் இருந்து அவர்களுக்கு ஏதாவது உடல் நலம் சரியில்லை என்றால் உதவுவதில் கூட கருமியாக செயல்பட்டு வருகிறார் அந்த காமெடி நடிகர் என சினிமா பிரபலங்களே பலமுறை நடிகரை விளாசி உள்ளனர். கடைந்தெடுத்த கஞ்சன் என்றே அந்த காமெடி நடிகருக்கு இண்டஸ்ட்ரியில் கெட்டப் பெயர் முளைத்துள்ளது.

பணியாட்களிடம் ஜாக்கிரதை
சமீபத்தில் அந்த உச்ச நட்சத்திரத்தின் மகள் வீட்டிலேயே நம்பிக்கையுடன் வைக்கப்பட்ட பணிப்பெண் ஒருவர் செய்த கை வரிசை ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஒவ்வொரு சினிமா பிரபலங்களும் வீட்டின் மேல் இதுவரை செலுத்தாத கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கதை அப்படியே ஆப்போசிட்டாக இருக்கு என பேச்சுவார்த்தைகள் கிளம்பி உள்ளன.

சம்பளம் தருவதில்லை
பல ஆண்டுகளாக தன்னுடன் பணியாற்றி வரும் பணியாள் ஒருவருக்கு சரியாக சம்பளமே தருவதில்லை என்றாலும், அவ்வப்போது மனம் வந்தோ வராமலோ அவர் கொடுக்கும் பணத்தை வைத்தே அந்த பணியாள் குடும்பத்தை ஓட்டி வந்திருக்கிறார். இந்நிலையில், தற்போது நடிகரிடம் இனியும் பணியாற்ற முடியாது என கம்பியை நீட்டி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகரால் டார்ச்சர்
அந்த நடிகர் மீண்டும் வாய்ப்பு கிடைத்தும் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ளாமல் சரியாக படங்களுக்கு செல்வதில்லையாம். ஆனால், நடிகருக்கு விழ வேண்டிய திட்டுக்கள் எல்லாம் நடிகர் இல்லாத நேரத்தில் அவருக்கு பிரதிநிதியாக இருக்கும் அந்த பணியாளுக்குத் தான் விழுந்து வருகிறதாம். பல முறை நடிகருக்கு எடுத்துச் சொன்னாலும் இவருக்கு அடியும் உதையும் தான் நடிகர் கொடுத்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

தப்பித்தால் போதும்
கால் வயிற்று கஞ்சியை நிம்மதியாக குடித்து விட்டு தனது குடும்பத்தை பார்த்துக் கொண்டால் போதும், இப்படி சினிமா நடிகரிடம் வேலைக்கு சேர்ந்து டார்ச்சர் அனுபவிக்க சக்தி இல்லை என ஒரே ஓட்டமாக அந்த நபர் ஓடி விட்டதாக கூறுகின்றனர். ஒரு புறம் நடிகர்களிடம் வேலை பார்ப்பவர்கள் ஏமாற்றி வரும் சூழலில் ஊழியர்களையே டார்ச்சர் செய்து ஓடவிடும் நடிகர்களும் இருக்காங்களே என கோடம்பாக்கம் டீ கடைகளில் சூடான பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











