கேவலம் காமெடி நடிகரிடம் தோத்துப் போயிட்டேனே.. வருத்தத்தில் பிரபல நடிகர்.. ரூட்டை மாற்றும் பாஸ்!
சென்னை: இந்த முறை பெரிய போட்டியெல்லாம் கிடையாது என்கிற ஆணவத்தில் ஆடிய வம்பு நடிகருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அவருக்கு வரவேண்டிய வெற்றி அந்த காமெடி நடிகர் படத்திற்கு தாவி விட்டது.
உடனடியாக வெற்றி விழாவை எல்லாம் அவசர அவசரமாக வைத்து பாஸ் நடிகரை ஏமாற்ற வம்பு நடிகர் ஏகப்பட்ட பிளான்கள் போட்டாலும், ஒரிஜினல் ரிப்போர்ட் அந்த நடிகருக்கு சென்று விட்டதாம்.
உடனடியாக அடுத்த படத்திற்கான ரூட்டையே அதிரடியாக மாற்றி உள்ளார் பாஸ் நடிகர் என்கிற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர் தோல்வி
தோற்றத்தை மாற்றினால் வெற்றி கிடைத்து விடும் என மூடநம்பிக்கையுடன் நடிகர் செயல்பட்டதால் தான் இப்படியொரு சிக்கலில் அவர் சிக்கிக் கொண்டார் என்றும் அடுத்த நடிகருக்கு உதவி செய்யணும்னு நினைத்து விட்டு அவருடைய கிரெடிட்ஸை கடைசி நேரத்தில் களவாண்டதன் விளைவு தான் இந்த பலத்த அடி என கோடம்பாக்கத்தில் பல பிரபலங்களே சத்தமாக பேசி வருகின்றனர்.

வாய் சொல் வீரர்
தனது ரசிகர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சந்திக்கும் போதெல்லாம் வேறமாறி வருவேன், இனிமே நீங்க தலை குனிய விட மாட்டேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு செயலில் எதுவுமே செய்ய மாட்டேங்கிறார் என்றும் வெறும் வாய் சொல் வீரர் தான் அவர் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

காமெடி நடிகரிடம் தோல்வி
எல்லாத்துக்கும் மேலாக இந்த முறை காமெடி நடிகர் படம் தானே என எண்ணி கிளாஷ் விட்டு பலத்த அடி வாங்கி விட்டாராம் அந்த வம்பு நடிகர் என கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சு நிலவி வரும் நிலையில், காமெடி நடிகரிடம் போய் தோற்று விட்டோமே என வம்பு நடிகர் ரொம்பவே புலம்பி அழுது வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மறைக்க முயற்சி
ஆனால், பெரியளவில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க நடிகர் அவசர அவசரமாக செய்த வேலைகள் எல்லாம் பாஸ் நடிகருக்கு தெரிந்து விட்டது தான் தற்போது மிகப்பெரிய தலைவலியாக மாறி உள்ளதாம். எப்படியாவது இந்த நடிகரின் மார்க்கெட் பெரிதாக இருக்கும் என நம்பி படத்தை தயாரிக்க முடிவு செய்த அவர் தற்போது மிகப்பெரிய யோசனையில் ரூட்டை மாற்ற உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ரூட்டை மாற்றும் நடிகர்
வெறும் இந்த நடிகரை மட்டும் வைத்து அந்த பிரம்மாண்ட படத்தை பல கோடி செலவு செய்து எடுத்தால் எல்லாமே பாழாய் போய்விடும் என்பதை புரிந்து கொண்ட பாஸ் நடிகர் பிரைட் நடிகர் அல்லது தமாஸ் ஹீரோ என மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டாக மாற்றி படத்தை உருவாக்க இயக்குநரிடம் ஆலோசனைகளை வழங்கி இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நடிகர் அப்செட்
பாஸ் நடிகர் திடீரென தனது மீது நம்பிக்கையை இழந்து விட்டாரே என அறிந்த வம்பு நடிகர் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் கோலிவுட்டில் புகையத் தொடங்கி உள்ளது. இந்த படத்தின் கதையை இன்னும் கொஞ்சம் மாற்றி அமைக்க வேண்டுமே என்கிற சிக்கலில் இயக்குநர் தனது கனவை கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்கள் மாற்றி வருகிறார்களே என்கிற வேதனையிலும் இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











