கவலையில் காமெடி நடிகர்.. அடுத்த படத்துக்கு ஒருத்தரும் கூப்டலையாம்.. எல்லாத்துக்கும் அதுதான் காரணமா?

By Staff

சென்னை: காமெடி நடிகர் தன்னோட நடிப்புத் திறமையை பார்த்துட்டு டைரக்டர், தயாரிப்பாளர்கள் எல்லாம் சும்மா வரிசையில வந்து நிப்பாங்க என பல கோடி ரூபாய் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், தற்போது அவரது வீட்டின் முன் ஒருத்தரும் வரலையாம்.

தடைக் காலத்துக்கு பிறகு காமெடி நடிகருக்கு காமெடியே சரியாக வரவில்லை என்றும் பழைய சரக்கு எல்லாம் ஒட்டுமொத்தமாக தீர்ந்து விட்டதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் மீண்டும் செய்யத் தொடங்கிய அலப்பறைகளும் தான் இதற்கு காரணம் என்கின்றனர்.

Comedy Actor didnt getting a single movie chance for next year also?

மீண்டும் காமெடியனாக மற்ற நடிகர்களுடன் நடிக்க முயற்சித்தாலும் யாரும் வாய்ப்புத் தரவில்லையாம். ஹீரோவாக நடிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனங்களையும் கதை கேட்கிறேன் வந்து சொல்லுங்கப்பா என போஸ்டர் அடித்து வெளியிட்டாலும் இயக்குநர்கள் காமெடி நடிகர் பக்கமே தலை வைத்து படுக்கவில்லை என்கின்றனர்.

ஒரே குழப்பமா இருக்கே: காமெடி நடிகர் திடீரென அழுகாச்சி நடிகராக மாறி அந்த படத்தில் அசத்தல் பர்ஃபார்மன்ஸ் கொடுத்து விட்டார். இதற்கு மேல் அவரை குணசித்ர நடிகராக கூட நடிக்க வைக்க பல இயக்குநர்கள் சூட்டோடு சூடாக முயற்சி செய்வார்களே என எதிர்பார்த்த பலருக்கும் நடிகரை ஒருத்தர் கூட சீண்டாமல் இருப்பது இண்டஸ்ட்ரியில் இருக்கும் பலருக்குமே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர்.

பேராசை பெரு நஷ்டம்: மீண்டும் காமெடியனாக நடிக்க அந்த நடிகருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். சமீபத்தில் அந்த பார்ட் 2 பேய் படத்தில் நடித்த போது இயக்குநருக்கே ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்திருக்கிறார். அவரது காட்சிகளை பார்த்து செட்டில் இருந்தவர்களே சிரிக்காமல், பெயருக்கு நடிகர் பார்க்கும் போது சிரிப்பது போல பாவனை செய்துள்ளனர்.

அதனை புரிந்துக் கொண்ட நடிகர் இனிமேல் காமெடி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றும் வேறு ஏதாவது வெயிட்டான ரோல் இருந்தாலும் சொல்லுங்கள் ஆனால், என்னுடைய சம்பளம் இதுதான் என சில பல கோடிகளை பேராசை காரணமாக ஏற்றியவர் இன்னமும் அதை குறைக்கவில்லையாம்.

அடுத்த வருஷமும் இல்லை: இந்த வருஷம் தான் தனக்கு புதிதாக ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்றாலும், அடுத்த வருஷத்திலாவது புதிய படத்துக்கு அட்வான்ஸ் வாங்கி பூஜையை போட்டு விடலாம் என இருந்த நடிகருக்கு இதுவரை ஒருவரும் அழைப்பு விடுக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளித்துள்ளதாம். சம்பளத்தில் கூட கொஞ்சம் குறைச்சிக்கிறேன் என சில தயாரிப்பாளர்களிடம் இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு காமெடி நடிகரின் நிலைமை படு மோசமாக இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X