செலவு செஞ்சது சில கோடி.. சம்பாதித்தது பல கோடியாம்.. திருமணத்தையே பிசினஸாக மாற்றிய காமெடி நடிகர்?

By Staff

சென்னை: பிரபல காமெடி நடிகரின் குடும்ப திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அந்த திருமணத்துக்கு அவர் செலவு செய்ததை விட அதிக வரவு வந்திருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. பெரிதாக பட வாய்ப்புகள் சமீப காலமாக அந்த நடிகருக்கு குவியாத நிலையில், எப்படி சம்பாதிக்கலாம் என திட்டம் போட்ட நடிகர் விழாவை வைத்தே வசூல் அள்ளிடலாம் என நினைத்து ஏகப்பட்ட பிளான் போட்டு அசத்தி விட்டார் என்கின்றனர்.

பல பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள காமெடி நடிகர் தனது வீட்டு திருமண விழாவை விட திருமணத்துக்கு முந்தைய விழாவை ஜாம் ஜாம் என நடத்தியிருந்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற திருமண விழாவும் பிரபலங்கள் சூழ அமோகமாக நடைபெற்றது.

Comedy actor earns big profit from recent wedding ceremony

ஆனால், இத்தனை கோடி செலவு செய்கிறாரே எப்படி என யோசித்த பிரபலங்கள் அவருக்கு அதற்கு மேல் அதன் மூலம் லாபம் கிடைத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் தற்போது அந்த காமெடியன் வீட்டுத் திருமணம் பற்றித்தான் பேசி வருகின்றனர்.

காமெடி நடிகர் வீட்டு கல்யாணம்: சினிமாவில் பல படங்களில் நடித்தாலும் முன்னணி காமெடி நடிகராக எல்லாம் அவர் வரவில்லை. மேலும், சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகளே பெரிதாக இல்லாமல் போய் விட்டது. நோய் வாய்ப்பட்ட அந்த காமெடி நடிகருக்கு ஏகப்பட்ட செலவுகள் ஏற்கனவே ஆன நிலையில், திடீரென பிரம்மாண்டமாக தனது வீட்டில் திருமணம் ஒன்றை நடத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

பெரிய டீலிங்: சமீப காலமாக பிரபலங்கள் திருமணம் செய்வது செலவு செய்வதற்காக அல்ல என்றும் அதை வைத்து எப்படி காசாக மாற்றலாம் என்பதில் காரியத்துடன் செயல்பட்டு வருகின்றனர் என்றும் சாதாரணமாக திருமண புகைப்படம் வெளியானாலே ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதை பார்த்து அதிகம் ஷேர் செய்கின்றனர். திருமண நிகழ்ச்சியை படமாக்கி விற்பதன் மூலம் பெரிய பிசினஸே செய்யலாம் என போடப்பட்ட டீலிங்கால் தான் அந்த காமெடி நடிகர் நம்பி களமிறங்கி அதிக செலவு செய்து திருமணத்தை நடத்தினார் என்கின்றனர்.

டபுள் மடங்கு லாபம்: திருமணத்துக்கு வந்த மொய்ப்பணமே சில கோடிகள் இருக்கும் எனக் கூறுகின்றனர். மேலும், திருமண படம் மூலம் பல கோடிகளை சம்பாதித்து விட்டாராம் அந்த காமெடி நடிகர். செலவு செய்ததை விட டபுள் மடங்கு லாபம் வந்தால் யார் தான் இப்படி எல்லாத்தையும் பப்ளிக் செய்ய மாட்டார்கள் என சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X