கதையெல்லாம் முக்கியமில்லை.. அதுக்கு ரெடினா வா.. காமெடி நடிகர் போட்ட புது ரூட்!

By Staff

சென்னை: காமெடியனாக இருந்து ஹீரோவான அந்த நடிகர் தற்போது கதையை எல்லாம் காது கொடுத்து கேட்பதே இல்லையாம். தன்னுடைய சம்பளத்தையும் கால்ஷீட்டையும் மட்டும் தான் கேட்டு புதிய படங்களை வரிசையாக புக் செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சில நடிகர்கள் வருஷத்துக்கு ஒரு படத்தை பார்த்து பார்த்து நடித்தாலே கடைசியில் தியேட்டரில் அந்த படத்தை ஒரு வாரத்துக்கு மேல் வந்து பார்க்க ஆளில்லை என்பதை அந்த காமெடி நடிகர் ரொம்ப நல்லா புரிந்துக் கொண்டுள்ளார்.

Comedy Actor expecting story and not interested to listen stories?

இந்நிலையில், இனிமே கதையெல்லாம் நம்பி படம் பண்ணினால் டைம் தான் வேஸ்ட் என அதிரடியாக புதிய ரூட்டை பிடித்து பல அட்வான்ஸை அள்ளிப் போட்டு வருகிறாராம்.

போட்டிக்கு யாருமில்லை: தன்னை விட்டால் தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என பெரிதாக யாருமில்லை என்பதால் அந்த நடிகர் ரொம்பவே திமிருடன் நடந்துக் கொள்கிறார் என்றும் பெரிய நடிகர்கள் படங்களில் நடித்து வரும் நிலையில், அவரது பந்தா எல்லாம் வேறலெவலில் மாறிவிட்டதாக கூறுகின்றனர். அவருக்கு போட்டியாக இருந்த நடிகர்கள் எல்லாம் பிழைக்கத் தெரியாமல் நடித்தால் ஹீரோவாத்தான் நடிப்பேன் என அடம்பிடித்து வரும் நிலையில், ஹீரோவாகவும் காமெடியனாகவும் கலக்கி வருகிறார்.

கதை முக்கியமே இல்லை: நல்ல கதை, மோசமான கதை எல்லாம் அந்த நடிகர் கண்டுக் கொள்வதே இல்லையாம். அவரை பொறுத்தவரையில் வருஷம் முழுவதும் நடிப்பதென்றால் கூட ஓகே தானாம். எல்லா படங்களிலும் கையெழுத்து போட்டு கமிட் ஆகிக் கொண்டே செல்கிறார். ஹீரோவாகவும், காமெடியனாகவும் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

அட்வான்ஸில் கறார்: அட்வான்ஸ் மற்றும் சம்பள விவகாரத்தில் மட்டும் தெரிந்தவர் தெரியாதவர் என வச்சு பார்ப்பதே இல்லை என்கின்றனர். அந்த விஷயத்தில் செம கறாராக நடிகர் இருந்து வருகிறார் எனக் கூறுகின்றனர்.

இதுதான் பாலிசி: இனிமேல் வருபவர் யாரும் புதிதாக கதையை யோசிக்கப் போவது இல்லை. அப்படியே யோசித்தாலும் திரைக்கதை நல்லா இருக்கணும், மேக்கிங் சரியா இருக்கணும், நாம ஏன் மண்டையை உடைச்சிக்கணும், சினிமா எடுக்க வர எல்லாருமே நமக்கு சம்பளத்தை கொடுக்கிற அளவுக்கு வசதி இருந்தா நடிச்சிட்டு போகலாமேன்னு முடிவு செய்து விட்டாராம். இவரது யோசனை அந்த காமெடி நடிகரும் பிக்கப் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X