அந்த வசனத்தால் வந்த வினை.. காமெடி நடிகர் படத்துக்கு இப்படியொரு சிக்கலா?.. என்ன ஆகுமோ!
சென்னை: காமெடி நடிகர் நடிப்பில் உருவாகி உள்ள படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷனுக்காக பண்ண வேலை படத்துக்கே எண்ட் கார்டு போடும் அளவுக்கு மாறும் என படத்தின் இயக்குநரும் நடிகரும் நினைக்கவே இல்லையாம். நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்தால் படம் பிச்சிக்கிட்டு போகும் என நினைத்த நடிகருக்கு அவரது கனவில் மண் அள்ளிப் போட்டு விட்டனர் என்கின்றனர்.
நாமும் எத்தனை வருஷம் தான் ஹீரோவுக்கு ஹீரோயினை செட் பண்ணி விட்டுக்கிட்டு இருப்பது என நினைத்த நடிகர் ஹீரோவாகவே முடிவு செய்து விட்டார். காமெடி நடிகர்கள் ஹீரோயினை டச் பண்ணக் கூட முடியாத சூழலில் ஹீரோயின்களை கட்டிப்பிடித்து டூயட்டே பாடலாம் என்கிற நினைப்புடன் தான் நடித்து வருகிறார் என்கின்றனர்.

புது புது ஹீரோயின்: பிரபல நடிகர்களே ஏற்கனவே நடித்த ஹீரோயின்களுடன் ஜோடி செட் ஆகி விட்டால் அடுத்த படத்திலும் அதே ஹீரோயின் உடன் தொடர்ந்து நடித்து வருகின்றனர். ஆனால், அந்த காமெடி நடிகர் ஒவ்வொரு படத்திலும் புது ஹீரோயின் உடன் மட்டுமே நடிப்பேன் என்கிற கொள்கையுடன் செயல்பட்டு வருவதாக திடுக்கிட வைக்கின்றனர். அவர் ஹீரோவாக நடித்த பல படங்களிலும் புதிய நடிகைகள் தான் இணைந்து நடித்து வருகிறார்களாம்.
முன்னணி ஹீரோயின்களுக்கு தூண்டில்: ஆனால், நடிகருக்கு இன்னமும் முன்னணி நடிகைகள் தன்னுடன் ஜோடி போட்டு நடிக்க மறுத்து வருவதை நினைத்து ரொம்பவே வருத்தம் உள்ளதாக கூறுகின்றனர். பல முறை நம்பர் நடிகைக்கு நகைச்சுவை நடிகர் தூண்டில் போட்டும் அவர் சிக்கவே இல்லையாம். மில்க் பியூட்டி உள்ளிட்ட நடிகைகளுக்கும் தூண்டில் என பலமுறை முயற்சி செய்தும் பலன் அளிக்காத நிலையில், இளம் நடிகைகளை ஜோடியாக்கி வருகிறார் என்கின்றனர்.
வசனத்தால் வந்த வினை: இது ஒரு பக்கம் இருக்க தனது படத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடிக் கொள்ளலாம் என நினைத்து பப்ளிசிட்டிக்காக வைக்கப்பட்ட வசனம் ஒன்று படத்திற்கே பெரிய சிக்கலை ஏற்படுத்தி விட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. தனது நண்பர் எதிர்ப்புகளை மீறியும் ரகசியமாக உதவினாலும் அதுவும் அம்பலமான நிலையில், பல தியேட்டர்கள் கிடைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் வசூலில் ஓவர்சீன் படம் அடிவாங்கியது போல இந்த படமும் அடிவாங்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











