சின்னத்திரை நடிகையிடம் கைவரிசை காட்டிய நகைச்சுவை நடிகர்.. இவரு அடங்கமாட்டாரு போலயே
சென்னை: சினிமாவில் சிரிப்பு போலீஸாகவும், காமெடி பீஸாகவும் வலம் வரும் அந்த 'பிரபல' நகைச்சுவை நடிகர், நிஜ வாழ்க்கையில் வில்லத்தனமான வேலைகளைச் செய்வதில் கில்லாடியாக இருக்கிறாராம். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி, "இனிமேல் திருந்திடுவேன்" என்று பவ்யம் காட்டியவர், இப்போது மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகையிடம் தனது கைவரிசையைக் காட்டி சிக்கலில் மாட்டியுள்ளார்.
அண்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்கள் மூலம் பாப்புலரான அந்த இளம் நடிகைக்கு, சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் லட்சியமாம். இதைத் தெரிந்துகொண்ட அந்த நகைச்சுவை நடிகர், தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி பெரிய பட வாய்ப்புகளை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
வலை விரித்த நடிகர்.. சிக்கிய நடிகை: பட வாய்ப்புக்காக நடிகையைத் தனியாகச் சந்திக்க வைத்த நடிகர், போகப் போகத் தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளார். பட வாய்ப்புக்காக ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக வாங்கியதோடு மட்டுமில்லாமல், அந்த நடிகையிடம் எல்லை மீறி நடக்க முயன்றதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

அடங்க மறுக்கும் 'காமெடி' நடிகர்: ஏற்கனவே இதேபோல பல நடிகைகளிடம் அட்வான்ஸ் வாங்கி ஏமாற்றிய புகாரும், அத்துமீறல் புகாரும் இந்த நடிகரின் மேல் அடுக்கடுக்காக இருக்கிறது. கொஞ்ச நாள் சத்தம் இல்லாமல் அடங்கி இருந்தவர், இப்போது சின்னத்திரை நடிகைகள் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளார்.
புத்தி போகல: "இவருக்கு வயசானாலும் அந்தப் புத்தி மட்டும் இன்னும் போகவே இல்லை. இன்னும் எத்தனை பேரைத்தான் ஏமாற்றப் போகிறாரோ?" என்று சின்னத்திரை வட்டாரத்தில் நடிகைகள் பலரும் இவரைப் பார்த்தாலே அலறி ஓடுகிறார்களாம். பாதிக்கப்பட்ட அந்த இளம் நடிகை, நடிகரின் டார்ச்சர் தாங்க முடியாமல் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளிக்கத் தயாராகி வருகிறாராம். விஷயம் பெரிதானால் நடிகரின் கரியரே க்ளோஸ் ஆகிவிடும் என்பதால், நடிகர் தரப்பில் இப்போது பஞ்சாயத்துப் பேச ஆட்களைத் தேடி வருகிறார்களாம். எது எப்படியோ... இவரு அடங்கவே மாட்டாரு போலயே.


Click it and Unblock the Notifications