இடுப்பில் கை வைத்து நடிக்க சொன்ன இயக்குநர்.. ஹீரோயினை கண்ட இடத்தில் தொட்ட காமெடி நடிகர்.. கேவலம்!
சென்னை: காமெடி நடிகராக உச்சத்துக்கு சென்றதும் ஹீரோயின்களுடன் தனக்கு காம்பினேஷன் சீன் வைத்தால் தான் நடிப்பேன் என அந்த நடிகர் ரொம்பவே அடம்பிடிக்க அவரது கால்ஷீட் கிடைத்தால் தான் படங்கள் ஹிட் ஆகும் என நினைத்த இயக்குநர்கல் சில டாப் ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.
டாப் ஹீரோயின்கள் காமெடி நடிகருடன் ஜோடி போட்டு நடிக்கும் காட்சிகளில் நடிக்க முதலில் சம்மதிக்கவே இல்லையாம். ஆனால், டைரக்டர்களின் நிலைமையை புரிந்துக் கொண்டு ஒரு சில டாப் நடிகைகளே காமெடி நடிகருடன் இணைந்து நடித்துள்ளனர்.

ஆனால், அதுதான் சாக்கு என நடிகைகளை ரொம்பவே ஒட்டி உரசி நடிக்க ஆரம்பித்த நடிகர் அந்த கம் நடிகையிடம் சில்மிஷம் செய்து சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார் என்றும் அதன் பின்னர், அந்த காமெடி நடிகர் நடிக்கும் படங்கள் என்றால் தான் நடிக்கவே மாட்டேன் என நடிகை முடிவாக சொல்லி விட்டார் என்கிற கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
ஹீரோக்களாக ஆசைப்படுவது ஏன்?: சினிமாவில் அழகாக இருப்பவர்கள் மட்டும் தான் ஹீரோக்களாக வேண்டும் என்கிற எந்தவொரு விதியும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆரம்பத்தில், ஹீரோவாகும் அளவுக்கு தங்களுக்கு அழகு இல்லை என்பதை அறிந்துக் கொண்ட நடிகர்கள் நகைச்சுவை நடிகர்களாக மாறி காலத்தை ஓட்டி விடலாம் என காமெடியன்களாக மாறுகின்றனர். ஆனல, ஒரு கட்டத்தில், தங்களுக்கென ரசிகர்கள் கூட்டமும் படங்களே தங்களால் தான் ஓடுகின்றன என்பதை அறிந்ததும் ஹீரோக்களாக மாற ஆசைப்படுகின்றனர். ஆனால், அனைத்துக்கும் மேலாக ஹீரோயின்களுடன் ஹீரோக்கள் போலவே ஒட்டி உரசி, கட்டிப்பிடித்து, கன்னத்தை தடவி, இடுப்பை கிள்ளி நடிக்கவே காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக மாறத் துடிக்கின்றனர் என்கின்றனர்.
அலட்சியப்படுத்தும் நடிகைகள்: ஹீரோவாக இருந்தால் சினிமாவில் அவர்களுடன் எப்படி வேண்டுமானாலும் ஹீரோயின்கள் நடிக்க ஓகே சொல்லிவிடுவார்கள். 3 நிமிடங்கள் தொடர்ந்து லிப் கிஸ் அடிக்க வேண்டும் என்றாலும், கட்டிப்பிடித்து டூயட் பாடவும் எப்போதுமே ரெடி தான். ஆனால், காமெடி நடிகர்கள், தங்கள் பக்கமே வர விடமாட்டார்கள். அந்த ஏக்கம் தான் ஒரு சில காமெடி நடிகர்களை காண்டாக்கி விடுவதாகவும் கூறுகின்றனர்.
டைரக்டர்களுக்கு டார்ச்சர்: ஒரு பக்கம் நோ சொல்லும் ஹீரோயின்கள், ஒரு பக்கம் காம்பினேஷன் மற்றும் நெருக்கமான சீன்களை கேட்கும் காமெடி நடிகர்கள் என செட்டில் ஒரே கூத்தாக இருக்கும் என்றும் அதுவும் அந்த காமெடி நடிகர் ஒரு கட்டத்துக்கு மேலே போட்ட ஆட்டம் இருக்கிறதே யப்பா தாங்க முடியலப்பா சாமி என்கிற ரேஞ்சுக்கு சொல்கின்றனர். டைரக்டரின் காதலி என்று தெரிந்தும் கூட டாப் ஹீரோயினுடன் நெருக்கமான காமெடி காட்சிகளை கம்போஸ் செய்து நடித்து திருப்தியடைந்தாராம்.
கண்ட இடத்தில் கை: கம் நடிகையுடன் தனக்கு டூயட் பாடல் வைத்தே ஆக வேண்டும் என அடம்பிடித்த காமெடி நடிகருடன் நடிக்க முதலில் ரொம்பவே நடிகை தயக்கம் காட்டியிருக்கிறார். அதை புரிந்துக் கொண்டு அவரை தொட்டு உரசி நடித்தாக வேண்டும் என இயக்குநரை இம்சிக்க, அவரும் அதற்கேற்ப ஒரு காட்சியை படமாக்கியுள்ளார். ஆனால், இடுப்பில் கை வைத்து நடிக்க சொல்ல, நடிகர் உணர்ச்சி வசப்பட்டு மேலே கை வைத்து விட்டாராம். உடனடியாக கடுப்பாகி நடிகை அடிக்கவே போய்விட்டார் என்றும் டைரக்டர் நடிகரை திட்டி நடிகையை அடிக்க விடாமல் தடுத்து விட்டார் என்றும் அதற்கு பிறகு அந்த நடிகருடன் நடிகை நடிக்கவே இல்லை என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











