நடிகரிடம் 2 கோடி ரூபாயை ஆட்டைய போட்ட நடிகை.. மனைவிக்கு தெரிந்தால் மானம் போய்விடும்.. கப்சிப்?

By Staff

சென்னை: காமெடி நடிகர் கடைசியாக நடித்த நடிகையுடன் ரொம்பவே நெருக்கமாக நடிக்க ஆரம்பித்த நிலையில், நடிகை வீசிய மாய வலையில் விழுந்து விட்டார் என்கின்றனர். மேலும், நடிகரின் மயக்கத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்ட நடிகை 2 கோடி ரூபாய் அளவுக்கு நடிகருக்கே தெரியாமல் அவரது பணத்தை ஆட்டைய போட்டுள்ளார் என பகீர் கிளப்பும் கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தில் கிளம்பி உள்ளன.

ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றும் ஹீரோயின்களுடன் கட்டிப்பிடித்தும், முத்தம் கொடுத்தும் என்ஜாய் பண்ணி ஜமாய்க்க வேண்டும் என்பதற்காக காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த அந்த நடிகர் ஹீரோவாக மாறியிருக்கிறார்.

Comedy actor loses big amount to young heroine shocks kollywood

ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், நடிகையிடம் ஏற்பட்ட நெருக்கமான நட்பு காரணமாக தேவையில்லாமல் சில கோடிகள் செலவாகி இருப்பதை உணர்ந்த நடிகர் எப்படி செலவானது என மனைவி கேட்டால், என்ன சொல்வது என்று புரியாமல் முழி பிதுங்கி இருப்பதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

ஜொள்ளு விட்ட நடிகர்: காமெடி நடிகர்களுக்கு பொதுவாகவே ஹீரோயின்கள் கிடைப்பது கஷ்டம் தான். முன்னணி நடிகைகள் எல்லாம் அவருடன் எல்லாம் ஜோடியாக சேர்ந்து நடித்தால் என்னோட மார்க்கெட் போய்விடும் என்றும் காமெடி நடிகருடன் நடிக்க பிடிக்காமலும் மறுத்து விடுவார்கள். ஆனால், ஒரு சில நடிகைகள் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் போது, காமெடி நடிகர் படங்கள் கிடைத்தால் கூட காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என புத்திசாலித்தனமாக ஓகே சொல்ல, நடிகை தன்னுடன் தயக்கமே இல்லாமல் தாராளமாக நெருக்கமான காட்சிகளிலும் நடிப்பதை பார்த்து நடிகர் ஜொள்ளு விட ஆரம்பித்து விட்டாராம்.

2 கோடி போச்சு: படத்தில் கிடைத்த சம்பளம் கம்மியாக இருந்தாலும் ஓகே சொல்லி நடித்த நடிகைக்கு லட்டு போல ஒரு ஆஃபர் கிடைத்ததும், காமெடி நடிகரை அழகாக பயன்படுத்திக் கொண்டு அவரது பணத்தை லாவகமாக சுருட்டிக் கொண்டு டாட்டா காட்டி விட்டாராம். இந்த விவகாரம் வெளியே தெரிந்தாலும் சிக்கல் ஆகிவிடும் என்றும் குறிப்பாக தனது மனைவிக்கு தெரிந்தால் பெரிய பூகம்பமே வெடிக்கும் என எண்ணிய நடிகர் திருடனுக்கு தேள் கொட்டியது போல கப்சிப் என இருந்து வருவதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நடிகையிடம் கெஞ்சல்: காமெடி நடிகர் எப்படியாவது நடிகையிடம் இருந்து கொஞ்சம் பணத்தையாவது திருப்பி வாங்கிவிட வேண்டும் என நடிகைக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறுகின்றனர். இந்த விவகாரம் நடிகரின் குடும்பத்துக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்கிற கேள்வி தான் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X