எப்படியாவது பணத்தை பிடுங்கணும்.. அந்த நடிகரை உள்ளே இழுத்தாத்தான் சரி பட்டு வரும்.. மாஸ்டர் பிளான்?
சென்னை: அந்த பிரபல நடிகர் மீது தேவையில்லாத பழியை போட்டு அவரை இந்த பிரச்சனைக்குள் இழுத்து விட்டால் தான் நினைத்த பணத்தை பிடுங்க முடியும் என ஆதரவாளர் போட்டுத் தந்த மாஸ்டர் பிளானில் தான் அந்த நடிகரின் விவாகரத்தான மனைவி அப்படியெல்லாம் பேசி வருகிறாராம்.
சாட்சிக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட பெண் எதை பேசினாலும் அப்படியே கேட்பார்கள் என பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்த நிலையில் தான் கிடைக்கிற மைக்கை எல்லாம் பிடித்து கன்டென்ட் கொடுத்து வருகிறார் அந்த ரியாலிட்டி ஷோ பிரபலம்.
சீனியர் நடிகரின் பெயருக்கு பங்கம் வந்து விட்டால் கணவர் வேறு வழியில்லாமல் பணத்தை எண்ணி வைப்பார் என தீட்டிய திட்டம் பக்காவாக வேலை செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

கணவர் வேண்டாம்
கணவர் குடித்து விட்டு வருகிறார். எனக்கும் என் மகளுக்கும் தொல்லை கொடுக்கிறார். இனி அவருடன் சேர்ந்து வாழப் போவதில்லை என ஏகப்பட்ட வசனங்களை பேசி விட்டு பிரிந்து போன அந்த ரியாலிட்டி ஷோ பிரபலம் தற்போது கணவரின் காசு மட்டும் வேண்டும் என வம்படியாக பிரச்சனை பண்ணுவது என்ன நியாயம் என கணவர் தரப்பு கேள்விகளை அடுக்கி உள்ளது.

தர முடியாது
பிரிந்து சென்ற மனைவி பற்றிய முழு விவரத்தையும் அறிந்து வைத்துள்ள அந்த நடிகர் மனைவி கொடுக்கும் அழுத்தத்திற்கு எல்லாம் ஆளாகி பணத்தை தூக்கி கொடுத்து விட முடியாது என்பதில் உறுதியாக உள்ளார். மேலும், மனைவியின் தவறான வழிகாட்டுதலில் குழந்தையின் எதிர்காலமும் பாதிக்கிறதே என ரொம்பவே கவலையில் ஆழ்ந்துள்ளார்.

நடிகரை இழுத்து விட்டால்
உடனடியாக பல லட்சம் பணத்துக்கு என்ன அவசியம் வந்தது என நடிகர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலையில், இருந்து வரும் அந்த பிரபலத்துக்கு ஆதரவாக இருப்பவர், வெறுமனே உன் புருஷனிடம் பணம் கேட்டால் ஒரு பைசா கூட வராது. அந்த பெரிய நடிகரை உள்ளே இழுத்து விட்டு அசிங்கப்படுத்தினால், அலறி அடித்துக் கொண்டு பணத்தை கொடுத்து விட்டு சரண்டர் ஆகி விடுவார் என சொன்னதால் தான் அப்படி வெளிப்படையாக அந்த நடிகர் பற்றி தற்போது பேச ஆரம்பித்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகர் அப்செட்
சின்னஞ் சிறுசுகள் சேர்ந்து வாழட்டுமே என பஞ்சாயத்துக்கு போனது ஒரு குத்தமா? இப்படி நம்ம பெயரை பஞ்சர் பண்ணிட்டாளே என நடிகர் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம். இந்த பிரச்சனை எந்த அளவுக்கு விரைவாக முடிக்க முடியுமோ அந்த அளவுக்கு விரைவாக முடித்து விடு என அந்த நடிகருக்கும் உத்தரவு பறந்துள்ளதாக கோடம்பாக்கம் முழுவதும் ஒரே பேச்சு அடிபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











