தலைக்கு ஏறிய புகழ் போதை.. அடுத்த படத்திற்கு அப்படியொரு செக் வைத்த காமெடி நடிகர்.. என்ன மேட்டர்?

By Staff

சென்னை: காமெடி நடிகர் கம்பேக் கொடுத்த படம் எதிர்பார்த்த ஹிட் அடிக்காமல் ஃபிளாப் ஆன நிலையில், அதன் பின்னர் 2 படத்தில் மட்டுமே அந்த காமெடி நடிகர் கமிட் ஆகியிருந்தார்.

பல முன்னணி நடிகர்கள் படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும், ஓகே சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்த காமெடி நடிகர் சமீபத்தில் வெளியான படத்தின் ரிலீசுக்காகத் தான் இத்தனை காலம் காத்துக் கொண்டிருந்தாராம்.

ஏற்கனவே இன்னொரு படத்தில் ஹீரோவாக வாய்ப்பு வந்த நிலையில், காமெடி நடிகர் 7 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டதால் அந்த தயாரிப்பாளர் ஆளவிடுறா சாமி என ஓட்டம் எடுத்துள்ளார்.

Comedy actor suddenly hiked his salary after his recent release movie do a huge business

ஏகப்பட்ட குற்றச்சாட்டு: காமெடி நடிகர் பல ஆண்டுகள் சினிமாவில் நடித்து வந்தாலும் அந்த பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் கமிட் ஆகி விட்டு இவர் செய்த அலப்பறை காரணமாக தயாரிப்பாளருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதால் அந்த படமே டிராப் ஆனது.

அதன் பின்னர் எழுந்த பஞ்சாயத்து காரணமாக காமெடி நடிகருக்கு பட வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்தன. அதன் பின்னர் அவர் கம்பேக் கொடுத்த படமும் பெரிதாக போகவில்லை என்றதுமே, இவர் அவ்ளோ தான் என சினிமா வட்டாரத்திலேயே பேச்சுக்கள் கிளம்பின.

புகழ் போதை: காமெடி நடிகர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டாலும், அவரது நடிப்பு மீது யாருமே இதுவரை குறை சொன்னதில்லை. இந்த வயதிலும் காமெடி ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறாரே என நினைத்த நிலையில், தன்னால் சீரியஸாகவும் நடிக்க முடியும் என நடித்துக் காட்டிய படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது.

நடிகருக்கு எக்கச்சக்க இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அடுத்தடுத்த படங்களில் இவர் அதிகம் கமிட் ஆகாததற்கு காரணமும் இந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து தான் என்கின்றனர்.

சம்பளத்தை உயர்த்திய நடிகர்: முன்னதாக தனது படத்துக்கு அதிக சம்பளத்தை காமெடி நடிகர் கேட்ட நிலையில், ஒருத்தரும் தர முன் வரவில்லையாம். அதனால், அடுத்தடுத்த படத்தில் ஹீரோவாக நடிப்பதையே நிறுத்தி வைத்த காமெடி நடிகர் மீண்டும் தனக்கு கிடைத்துள்ள புகழ் வெளிச்சத்தை தற்போது அதிரடியாக பயன்படுத்தி வருகிறாராம்.

7 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு வந்த அந்த காமெடி நடிகர் தற்போது 10 கோடி ரூபாய் கொடுத்தால் அடுத்த படத்தில் நடிக்க ரெடி என்கிற அளவுக்கு இன்றைய மார்க்கெட்டை பற்றி அறிந்துக் கொண்டு அதிரடியாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்கின்றனர். ஆனால், அவர் கேட்கும் அளவுக்குத் தொகையை அவரை நம்பி அடுத்த படத்தில் செலவிட யார் தயாராக இருப்பார்கள் என்கிற கேள்வியும் கிளம்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X