இந்த வயசுல இது தேவையா? அந்த இளம் நடிகைக்கு அப்படியொரு டார்ச்சர் கொடுக்கிறாராம் காமெடி நடிகர்!

By Staff

சென்னை: காமெடி நடிகருக்கு முன்பை போல சூப்பராக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் போய் விட்டது என்றும் தற்போது பெயருக்காக மட்டுமே ஷூட்டிங் வந்து செல்கிறார் என்றும் கூறுகின்றனர்.

புதிய படங்களில் கமிட் ஆனாலும், சரியான நேரத்துக்கு வருவதில்லை என்றும் ஓவர் அலம்பல் செய்து வருகிறார் என்றும் பெரும் பஞ்சாயத்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், இளம் நடிகை ஒருவருக்கு போன் பண்ணி தினமும் டார்ச்சர் கொடுக்கிறார் என்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

Comedy actor tortures Young actress over phone talks shocks industry

ராங்கு காட்டும் காமெடி நடிகர்: ஹீரோவாகவும் காமெடியனாகவும் நடித்து வரும் அந்த பிரபல காமெடி நடிகர் சமீப காலமாக ஷூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை என்றும் பாதியிலேயே கிளம்பி விடுவதாகவும் ஏகப்பட்ட புகார்கள் கிளம்பி உள்ளன. மேலும், தயாரிப்பாளர்களின் பணத்தை தாராளமாக செலவு செய்து வீணடித்து வருகிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

கை நழுவும் பட வாய்ப்புகள்: அதிக சம்பளம் கேட்பது மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் நேரத்துக்கு வராமல் இருப்பது என்றும் 3 மணி நேரம் தான் அதிகபட்சமாக நடிப்பது என ஷூட்டிங்கில் இருந்து அடிக்கடி ஹோட்டலுக்கு ரெஸ்ட் எடுக்கப் போறேன் என கிளம்பி போய் விடுகிறாராம் அந்த காமெடி நடிகர்.

சபலம் வேறு: வயதான காலத்திலும் நடித்து வரும் அந்த காமெடி நடிகர் உடன் பணியாற்றும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களை கூட விட்டு வைப்பதில்லை என்றும் பட வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என பல பெண்களிடம் சில்மிஷம் செய்து வருகிறார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் கிளம்பி உள்ளன.

Comedy actor tortures Young actress over phone talks shocks industry

இளம் நடிகைக்கு டார்ச்சர்: சமீபத்தில் காமெடி நடிகருடன் இணைந்து நடித்த இளம் நடிகை ஒருவருக்கு தினமும் நள்ளிரவு நேரத்தில் போன் போட்டு எப்படி இருக்க? சாப்பிட்டியா? அடுத்த படத்தில் நீ தான் எனக்கு ஜோடி, சினிமாவில் என்ன ஆகணும்னு உனக்கு ஆசை என ஜொள்ளு விட்டு தொல்லை தருகிறார் என அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

கதறி அழும் நடிகை: பிரபலமான நடிகர் என்பதால் இந்த விவகாரத்தை வெளியே சொல்லவும் முடியாமல் மனதுக்குள்ளே மறைத்து வைக்கவும் முடியாமல் தனது அம்மாவிடம் நடிகை அழுது புலம்பி உள்ளதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன. வேறு மாதிரி டார்ச்சர் கொடுத்தால் உடனடியாக சொல்லி விடு போலீஸில் புகார் அளித்து விடலாம் எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் பரவாயில்லை என நடிகையின் அம்மா நடிகைக்கு ஊக்கம் கொடுத்திருப்பதாகவும் செவி வழி செய்திகள் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X