வாரிசோட கனவு இப்படி கவிழ்ந்து விட்டதே.. எல்லாத்துக்கும் காரணம் அந்த காமெடி நடிகர் தானா?

By Staff

தனது கடைசி படத்தில் கூட ஒட்டுமொத்த வெளிச்சத்தையும் தன் பக்கம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என நினைத்து அந்த காமெடி நடிகரை ஹைலைட்டாக அந்த பெரிய இடத்து வாரிசு மாற்றிய நிலையில், கடைசியில் வாரிசோட பிளானுக்கு பெரிய ஆப்பாக வைத்து விட்டாராம் அந்த காமெடி நடிகர்.

காமெடி நடிகர் கம்பேக் கொடுத்தாலும், ஒருத்தரும் அவரை கண்டுக் கொள்ளாமல் கழட்டி விட்டு விட்டனர்.

இந்நிலையில், விரைவில் வெளியாக உள்ள அந்த பெரிய படத்தின் மீது காமெடி நடிகர் ரொம்பவே எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார். ஆனால், அவருக்கும் அதிகமாக அந்த படத்தை வாரிசு நடிகர் நம்பிக் கொண்டிருக்கையில் எதிர்பாராமல் காமெடி நடிகரே படத்திற்கு ஸ்பீடு பிரேக்காக அமைந்து விட்டார் என்கின்றனர்.

Comedy actor turns real villain to the Big background actor

சிக்கிய இயக்குநர்: நீங்க தான் நல்ல இயக்குநராச்சே, எங்க ரெண்டு பேரையும் வைத்து ஒரு படத்தை இயக்கி ஹிட் கொடுக்கிறது என அந்த பெரிய இடத்து வாரிசும், காமெடி நடிகரும் ஒன்றாக அந்த இயக்குநரை கார்னர் செய்ய, கிடைத்த வாய்ப்பை வைத்து விளையாடி விட வேண்டியது தான் என அந்த இயக்குநர் பெரிய சம்பவமே செய்து விட்டாராம்.

இயக்குநரிடம் நடிகர்கள் சிக்கினார்களா? நடிகர்களிடம் இயக்குநர் சிக்கினாரா என்பது படம் வெளியான பின்னர் தான் தெரியும் என்கிற அளவுக்கு கோலிவுட்டில் அந்த படத்தை பற்றிய பேச்சுக்கள் பரபரப்பை கிளப்பி உள்ளன.

காமெடி நடிகரால் கண்டம்: ஏற்கனவே உடைத்த ஃப்ர்னிச்சர் எல்லாம் போதாதா? இனியும் உடைக்கணுமா என்கிற ரேஞ்சுக்கு காமெடி நடிகரை லீடு ரோலில் வைத்து மற்றவர்களை டம்மியாக்கி அந்த இயக்குநர் உருவாக்கி உள்ள அந்த ராஜா டைட்டில் படத்தை சமீபத்தில் போட்டு பார்த்த வாரிசுக்கு திருப்தியே ஏற்பட வில்லை என்கின்றனர்.

தமாஸ் நடிகர், ஹைட் நடிகர் என பலரது படங்களை கலாய்த்து வந்த அந்த பெரிய இடத்து வாரிசு நடித்த படம் பல படங்களை பார்த்த ஃபீலிங்கை தான் தருகிறதாம். இவர்களை வைத்து புதுசா ஏதும் எடுக்க முடியாது என இயக்குநர் பழைய மாவையே மீண்டும் அரைத்து இருக்கிறாராம். அதிலும், காமெடி நடிகரின் போர்ஷன் எல்லாம் கர்ண கொடூரமாக இருப்பதால் நடிகரே அப்செட் ஆகி விட்டார் என்கின்றனர்.

இன்னொரு படம்: இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றால், இன்னொரு படம் ஒன்றில் சோலோ பர்ஃபார்மன்ஸ் கொடுத்து விட்டு, ஜூட் விடலாம் என்கிற முடிவுக்கு அந்த நடிகர் உள்ளதாக ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X