Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
தொடர் தோல்வி.. கழுத்து நிறைய கடன்.. மீண்டும் காமெடிக்கு தாவும் வாசனை நடிகர்.. ரொம்ப லேட்?
சென்னை: காமெடியனாக கலக்கி வந்த அந்த வாசனை நடிகர் நமக்கு பின் அந்த தொலைக்காட்சியில் இருந்து வந்தவன் எல்லாம் ஹீரோ ஆகிட்டானே என்கிற காண்டில் இனிமே நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேன் என தனது ரூட்டை அதிரடியாக மாற்றினார்.
காமெடியனாக நடித்து அசத்தி வந்த அவர் ஹீரோவானாலும் காமெடி படங்கள் தானே பண்ணப் போகிறோம் பெரிய லெவலில் படங்கள் ஹிட் அடிக்கும் என நினைத்துக் கொண்டிருந்தார்.
ஆனால், ஹீரோவாக அவர் நடித்த படங்கள் எல்லாம் மரண மொக்கை காமெடி படங்களாக மாற தொடர் தோல்வியை சந்தித்து வந்தார்.
அலப்பறை மன்னன் சந்தானம் பிறந்த நாள் இன்று...பெஸ்ட் காமெடி டயலாக் ரீவைண்ட்!

கடனில் தத்தளிப்பு
இளம் நடிகர்களே தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி ஹிட் கொடுத்து பல கோடிகளை சம்பாதித்து வருகின்றனரே என நினைத்து ஹீரோவாக மட்டுமின்றி தான் நடிக்கும் படங்களை தானே தயாரித்து வெளியிடவும் முடிவு செய்து பெரும் கடனில் தத்தளித்து வருகிறாராம் அந்த காமெடி நடிகர்.

வொர்க்கவுட் ஆகல
காமெடி நடிகர்கள் பலர் ஹீரோவாக நடிக்க முயற்சித்து வெற்றியும் தோல்வியும் மாறி மாறி சந்தித்துள்ளனர். ஆனால், தொடர்ந்து பல படங்கள் இந்த நடிகருக்கு தோல்வியாக மாறிய நிலையில், ரொம்பவே சிக்கலில் சிரிப்பு நடிகர் சிக்கித் தவித்து வந்த நிலையில், சரியான நேரத்தில் அவரை மடக்கி பிடித்து டாப் நடிகர் படத்தில் நடிக்க வைக்க அந்த காதல் இயக்குநர் காய் நகர்த்த நடிகரும் கொஞ்சம் பில்டப் பண்ணிட்டு உடனடியாக ஓகே சொல்லி விட்டாராம்.

விஷயம் லீக் ஆகிடுச்சு
இனிமே ஹீரோவாகவும், அவ்வப்போது காமெடியனாகவும் நடிப்பேன் என மீண்டும் காமெடியனாக நடிக்க வாசனை நடிகர் ரகசியமாக அந்த ஒரு இயக்குநருக்கு மட்டும் சொன்ன தகவல் அப்படியே கோடம்பாக்கம் முழுவதும் லீக் ஆகிவிட்டது போல செட்டிங் செய்து ஏகப்பட்ட வாய்ப்புகளை பிடித்து வருகிறாராம் அந்த நடிகர்.

காமெடிக்கு பஞ்சம்
காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீரோக்களாக மாறிய நிலையில், புதிதாக அந்த இடத்துக்கு பெரியளவில் நடிகர்கள் வந்து நிரப்ப முடியாத சூழல் நிலவி வருவதை உணர்ந்து கொண்ட நடிகர் மீண்டும் காமெடி பக்கம் சென்றால் இன்னொரு ரவுண்டு வரலாம். நன்றாக சம்பாதித்து விட்டு தெளிவாக சில படங்களில் மட்டும் ஹீரோவாக நடித்து நம் லட்சியத்தையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என முடிவு கட்டி விட்டாராம்.

ரொம்ப லேட்
சமீபத்தில் இன்னொரு படத்திலும் நடிகர் இணைந்து விட்ட நிலையில், அந்த படத்தின் இயக்குநர் உன்னை முன்பே சில படங்களுக்கு காமெடியனாக நடிக்க அழைத்தேன். நீ வரல.. இப்போவாவது வந்தது ரொம்ப சந்தோஷம். ஆனால், இது கொஞ்சம் லேட்டான முடிவு தான் என்றாலும் நல்ல முடிவு தான் என்று கூறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மனசை தேத்திக்கிட்டாரு
இந்த திடீர் மாற்றம் நடிகருக்கு அதிக மன வருத்தத்தை கொடுத்தாலும் கால மாற்றத்திற்கு ஏற்ப மாறி தானே ஆக வேண்டும். இனிமே ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என நினைத்துக் கொண்டு தனது மனசை தேத்திக்கிட்டாராம். அட்வான்ஸ் வாங்கியது தெரிந்த உடனே கடன் கொடுத்தவர்கள் எல்லாம் க்யூவில் வந்து நிற்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.