மாஸ் நடிகருக்கு குடைச்சல் கொடுக்க காமெடி நடிகருக்கு இத்தனை கோடி சம்பளமா?.. ஷாக்கான கோலிவுட்!

By Staff

சென்னை: அரசியலில் ஆர்வம் காட்டி வரும் மாஸ் நடிகருக்கு எதிராக குடைச்சல் கொடுக்க காமெடி நடிகரை அந்த பிரபல கட்சி கொம்பு சீவி வருவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

ஏற்கனவே சினிமா நடிகர் ஒருவரை அந்த காமெடி நடிகர் தான் தனது பேச்சாற்றலால் காலி பண்ணது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

Comedy Actor will soon clash with Popular Actor who entered recently into Politics

இந்நிலையில், அடுத்த புராஜெக்ட் அந்த காமெடி நடிகருக்கு வழங்கப்பட்டு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

அரசியலில் காமெடி நடிகர்: சில காலம் அமைதியாக அரசியலில் அதிகம் தலைகாட்டாமல் இருந்து வந்த காமெடி நடிகர் மீண்டும் மிகப்பெரிய வரவேற்புடன் அந்த அரசியல் கட்சியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறார். தொடர்ந்து அந்த கட்சியின் நிகழ்ச்சிகளுக்கும் நடிகர் அடிக்கடி விசிட் அடித்து மீண்டும் நான் களத்தில் குதித்து விட்டேன் என்பதை தெளிவுப்படுத்தி வருகிறார். இவரது வருகை அந்த கட்சியில் இருக்கும் சிலருக்கே பிடிக்கவில்லை என்றாலும், தலைமையிடத்தை எதிர்த்துக் கொள்ள முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.

சிங்கத்தையே சாய்ச்சுப்புட்டாரு: அரசியலில் மிகப்பெரிய சிங்கமாக வலம் வந்த அந்த பிரபல நடிகரையே காமெடி பீஸாக மாற்றி சாய்த்தது இந்த காமெடி நடிகர் தான் எனக் கூறுகின்றனர். நடிகரின் தயவால் வளர்ந்து பின்னர் நடிகருக்கே வினையாக மாறி விட்டார் என்றும் நன்றி கெட்ட மனிதர் என்றும் விளாசி வருகின்றனர்.

மாஸ் நடிகருக்கு சிக்கல்: அந்த நடிகருக்கு குடைச்சல் கொடுத்ததை போலவே மாஸ் நடிகருடன் பல படங்களில் நடித்து வந்த காமெடி நடிகர் தற்போது புதிதாக அரசியலில் அடியெடுத்து வைக்க மாஸ் நடிகருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் வேலைகளை பார்க்கப் போவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

பல கோடி சம்பளம்: அந்த நடிகரின் அரசியல் எதிர்காலத்தை ஆரம்பிக்கும் முன்பே காலி செய்வதற்கு உரிய வேலைகளை பார்க்க வேண்டும் என்றும் அதற்கு பல கோடி சம்பளமும் பேசப்பட்டு அட்வான்ஸும் கொடுக்கப்பட்டு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், காமெடி நடிகரின் வேலை எல்லாம் மாஸ் நடிகரிடம் வேகாது என அரசியல் வட்டாரத்தில் இருப்பவர்களே அந்த நடிகருக்கு தேவையில்லாமல் தண்டச் செலவு செய்கின்றனர் என பேசிக் கொள்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X