நம்பர் நடிகையுடன் முட்டிக்கிச்சு.. பர்த்டே பாய் அவங்களை கழட்டிவிட காரணமே அதுதானா?.. என்ன ஆச்சு?

By Staff

சென்னை: அந்த காமெடி டைரக்டர் தனது அடுத்த பெரிய பட்ஜெட் படத்தை ஒரு வார்த்தை கூட வாய் திறக்காமல் பிறந்தநாள் கொண்டாடியது கோடம்பாக்கத்தில் ஏகப்பட்ட கிசுகிசுக்களை கிலப்பி விட்டுள்ளது. பதிலுக்கு நடிகையும் வார்த்தைக்கு கூட ஒரு வாழ்த்து சொல்லாதது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஏற்கனவே உச்ச நடிகரிடம் பஞ்சாயத்து பண்ணி பெரிய வாய்ப்பையே நம்பர் நடிகையின் கணவர் போல கோட்டை விட்டுவிட்டார் அந்த காமெடி டைரக்டர். இந்நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு அந்த மில்க் பியூட்டியை மட்டும் ஹைலைட் பண்ணது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Comedy Director simulating Popular Actress ego with competitior movie update

நம்பர் நடிகை படம் தொடர்பான பெரிய அப்டேட் காமெடி டைரக்டரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் பிம்பிளிக்கா பிலாப்பி தான்.

ஆரம்பத்தில் இருந்தே சண்டை: நம்பர் நடிகையுடன் படத்தை தொடங்கியதில் இருந்தே அவர் சொல்வதை இவரும் இவர் சொல்வதை அவரும் கேட்பதே இல்லையாம். நம்பர் நடிகை பண்ணும் பந்தாவை எல்லாம் பார்த்து ஒருமுறை செட்டில் சிரித்தே விட்டாராம் காமெடி டைரக்டர். அதனால், மேலும், நம்பர் நடிகை இவர் மீது கடுப்பாகி வேலையை மட்டும் முடித்துவிட்டு வழக்கம் போல கம்பியை நீட்டி விடுவோம் என்கிற நிலைப்பாட்டுடன் உள்ளார் என்கின்றனர்.

Comedy Director simulating Popular Actress ego with competitior movie update

வெளிநாட்டு டூர்: மேலும், அடிக்கடி படத்துக்கு பிரேக் விட்டு விட்டு வெளிநாட்டுக்கு டூர் அடித்து வருகிறாராம். நம்பர் நடிகை வரும் போது படத்தை எடுத்து முடித்தால் போதும் என தயாரிப்பாளரும் எப்படியாவது போட்ட பெரும் தொகைக்கு எண்ட் கார்டு போட்டு விடாமல் படத்தை முடிக்க இரு தரப்பையும் அட்ஜெட்ஸ்ட் பண்ணிக் கொண்டு வருகிறார் என்கின்றனர்.

நம்பர் நடிகையை கண்டுக்கல: இந்நிலையில், டைரக்டரின் பர்த்டேவின் போது நம்பர் நடிகை படத்தின் எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடாமல், அதற்கு பதிலாக மில்க் பியூட்டியின் புதிய படத்தை மட்டுமே பெரிய பில்டப்பாக செஞ்சு வெளியிட்டு நம்பர் நடிகையை வெறுப்பேற்றியுள்ளார் காமெடி டைரக்டர் என கோடம்பாக்கத்தில் அவலுக்கு பதிலாக அந்த இயக்குநரை போட்டு மெல்ல ஆரம்பித்து விட்டனர். இந்த பிரச்னை படம் வெளியாகும் சமயத்தில் கண்டிப்பாக பெருசாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X