அந்த ரெண்டு டாப் நடிகருக்கும் மசாலா தடவும் காமெடி இயக்குநர்.. சிக்கப் போறது யாருன்னு தெரியலையே?
சென்னை: ஹீரோவாக நடித்தாலும் அதிகப்படியான மக்களை தியேட்டருக்கு ஈர்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் அந்த காமெடி இயக்குநருக்கு வந்து விட்டதாம்.
இயக்கம் தனக்கு நன்றாக வருகிறதே என உணர்ந்து கொண்ட அவர், முன்னணி நடிகர்களை இயக்கி விட வேண்டும் என்கிற முடிவுக்கே வந்து விட்டாராம்.
அதன் காரணமாகவே சமீப காலமாக டாப் நடிகர் மற்றும் மாஸ் ஹீரோவை மடக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்
தொழிலதிபரின் மகனோ அல்லது பிரபல சினிமா கலைஞரின் வாரிசோ கிடையாது. சாதாரண குடும்பத்தில் ஏகப்பட்ட கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து வளர்ந்த அவர், தற்போது சினிமாவில் பலரும் மதிக்கக் கூடிய ஒரு இடத்துக்கு உயர்ந்திருக்கிறார். காமெடியனாக நடித்தே காலத்தைக் கடத்தலாம் என நினைக்காமல் தனக்கான கதைகளை தேர்வு செய்து ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.

இயக்கத்தில் ஆசை
ஆனால், நடிப்பதை விட இயக்கத்தில் தான் தற்போது அவருக்கு மிகப்பெரிய ஆசை எழுந்துள்ளதாம். அதற்கு காரணம் தன் முகம் மற்றும் தோற்றத்தை வைத்து குவியும் ட்ரோல்கள் மற்றும் தன் படத்தை பார்க்க ரசிகர்கள் குவியவில்லையே என்கிற ஏக்கம் தான வரை இப்படியொரு முடிவை நோக்கியே தள்ளி இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மாஸ் ஹீரோவை மடக்க
சமீபத்தில் மாஸ் ஹீரோவுக்கு கதை சொல்லும் வாய்ப்பே கிடைத்த நிலையில், பெரிய படமாக பண்ணி ஒரே படத்தில் ஓஹோன்னு செட்டில் ஆகி விடலாம் என மாஸ் பிளான் போட்டிருக்கிறார். ஆனால், உஷாரான மாஸ் ஹீரோ, லோ பட்ஜெட்டில், உங்களுக்கு என்ன வருமோ அப்படியொரு காமெடி கதையுடன் வாங்க என கண்ணியமாக அனுப்பி வைத்து விட்டாராம்.

அடுத்து டாப் நடிகர்
மாஸ் ஹீரோ மிஸ் ஆன வருத்தத்தை சமீபத்தில் சிரித்தப்படியே போட்டு உடைத்த காமெடி இயக்குநர், அடுத்ததாக டாப் ஹீரோவை பிடிக்க பயங்கரமாக சேஸ் செய்து வருகிறார். ஆனால், அதற்கெல்லாம் அவர் சிக்குவாரா? என்பது கேள்விக் குறியான விஷயம் தான். ஆனால், அவரை பிடிக்க காமெடி இயக்குநர் கைவசம் ஒரு தயாரிப்பாளரே இருக்கும் நிலையில், அதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறாராம்.

தலையை சிலுப்பினா
இளம் இயக்குநர்களுடன் படம் பண்ணலாம் என்கிற முடிவுக்கும் காமெடி, ரொமான்ஸ் என பழைய படி ட்ரை பண்ணலாம் என்றும் டாப் நடிகர் முடிவெடுத்து விட்டாராம். இந்நிலையில், காமெடி இயக்குநர் சரியாக காய் நகர்த்தினால், அந்த வாய்ப்பை தன் வசப்படுத்திக் கொள்ளலாம் என முயற்சித்து வருகிறார். டாப் நடிகர் தலையை சிலுப்பினால் போதும், ஒரே அமுக்காக அமுக்கி விட முடிவு செய்திருக்கிறாராம் அந்த காமெடி இயக்குநர்.


Click it and Unblock the Notifications











