For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கொஞ்சம் கூட நம்பாத உச்ச நடிகர்.. கடுப்பின் உச்சியில் காமெடி இயக்குநர்.. என்ன முடிவு எடுக்கப் போறாரோ?

  By Staff
  |

  சென்னை: சமீபத்தில் காஸ்ட்லி ஃபர்னிச்சர் ஒன்றை கண்டபடி அந்த இயக்குநர் உடைச்சது தான் அவரது வெற்றிகளை எல்லாம் மறந்து இப்படியொரு நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டு இருக்கிறார்.

  உச்ச நடிகரின் படத்தை இயக்கப் போகிறோம் என செம உற்சாகத்தில் இருந்து வந்த அந்த இயக்குநருக்கு, தற்போது ஏன் டா கமிட் ஆனோம் என்கிற மனக் கவலை தான் முழுவதுமாக பீடித்துள்ளதாம்.

  போகும் இடங்களில், பார்க்கும் மனிதர்கள் என பலரும் அவரை ட்ரோல் செய்தது போதாது என உச்ச நடிகரே அவரை நம்பாமல் வேறு ஒரு முடிவு எடுத்தது தான் அவரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளதாம்.

  திருமண பிளான் இது தான்...அதிகாரப்பூர்வமாக அறிவித்த விக்னேஷ் சிவன் திருமண பிளான் இது தான்...அதிகாரப்பூர்வமாக அறிவித்த விக்னேஷ் சிவன்

  பரமபத பாம்பு

  பரமபத பாம்பு

  சினிமாவில் ஒரு சில படங்களை இயக்கியதுமே மாஸ் ஹீரோ, உச்ச நடிகர் என விஸ்வரூப வளர்ச்சி அடைந்தார். ஆனால், இந்த பரமபதத்தில் பாம்புகளும் இருக்கும் என்பதை அறியாமல் ஜாலியாக ஏணிகளில் ஏறி வந்த அந்த இயக்குநருக்கு சமீபத்தில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டது பெரும் பின்னடைவை தந்துள்ளது.

  மதில் மேல் பூனை

  மதில் மேல் பூனை

  இந்த படத்தை இயக்கவில்லை என்றாலும், சிக்கல் ஆகிவிடும், இயக்கினாலும், கடைசி வரை ஏகப்பட்ட சிக்கல்களையும் அவமானங்களையும் தாங்க வேண்டும் என்பதால் மதில் மேல் பூனை போல எந்த பக்கம் தாவுவது என்று புரியாமல் ஒரே குழப்பத்தில் மனக் கஷ்டங்களை வெளியே சொல்லாமல் உள்ளே அழுது கொண்டு இருக்கிறாராம் அந்த இயக்குநர்.

  நம்பிக்கை இல்லை

  நம்பிக்கை இல்லை

  இயக்குநரை மாற்ற வேண்டாம் என உச்ச நடிகர் சொன்னதும் சந்தோஷப்பட்ட அந்த இயக்குநர். தற்போது, இயக்குநரை நம்பாமல் உச்ச நடிகர் செய்துள்ள மாற்று ஏற்பாடு காரணமாக சோகத்தின் உச்சிக்கே சென்றுள்ளாராம். இந்த படத்தை இயக்கப்போவதில்லை என்றே சொல்லி விட்டு விலகிவிடும் முடிவுக்கே அவர் வந்து விட்டதாகவும், ஆனால், நெருங்கிய நண்பர் நடிகர் அளித்த அட்வைஸ் பேரில் அமைதி காத்து வருவதாக கூறுகின்றனர்.

  நடிகரே அதையும் பண்றாரு

  நடிகரே அதையும் பண்றாரு

  தன்னை வைத்து அடுத்தவர்கள் கேம் ஆடிவிடுகிறார்கள் என்கிற எண்ணம் உச்ச நடிகருக்கு சமீப காலமாக அவர் நடித்து மொக்கை வாங்கிய படங்களின் மூலம் ரொம்பவே ஆழமாக பதிந்து விட்டது. இந்நிலையில், தன்னை எப்படி மாஸாக காட்ட வேண்டும் என்பதற்காக தனக்கான கதையை தானே எழுதி அதை பண்ணும் கருவியாகவே அந்த இயக்குநரை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  தலையை கொடுத்த ஆடு

  தலையை கொடுத்த ஆடு

  விருப்பமே இல்லாமல் தலையை கொடுத்த ஆடாக அந்த இயக்குநர் உச்ச நடிகர் மற்றும் அவரது அணி என்ன உத்தரவு இடுகிறதோ அதை அமைதியாக செய்துவிட்டு இந்த தொல்லையில் இருந்து நகர்ந்து விடலாம் என்கிற ஒரே நோக்கத்துடன் அமைதி காத்து வருகிறார் அந்த காமெடி இயக்குநர் என கோடம்பாக்கம் முழுவதும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. பகைத்துக் கொண்டால், காணாமல் போய்விடுவோமோ என்கிற பயம் அவருக்கும் இருக்கத்தானே செய்யும்.

  English summary
  Comedy Director upset over Star actor didn’t believe him fully for his next movie and making some other arrangements for the film shocks Kollywood.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X