இரு தலை கொள்ளி எறும்பாக தவிக்கும் காமெடி இயக்குநர்.. அந்த மேட்டரை எப்படி சமாளிக்கப் போறாரோ?

By Staff

சென்னை: மாஸ் ஹீரோவை வைத்து அந்த காமெடி இயக்குநர் பண்ண காமெடி வொர்க்கவுட் ஆகாத நிலையில், பயங்கர அப்செட் ஆகி இருந்த மனுஷன் சோஷியல் மீடியா பக்கமே வரல..

பாஸ் நடிகரின் படம் டிரெண்டிங்காக பேசப்பட்டு வரும் நிலையில், போட்டியை ஆரம்பிக்க நினைத்த உச்ச நடிகர் உத்தரவு போட உடனடியாக டைட்டிலை அறிவித்து விட்டனர்.

இந்நிலையில், ஏகப்பட்ட ஸ்டோரிக்கள் டைட்டிலை ஒட்டி வெளியாக தொடங்கிய நிலையில், இரு தலை கொள்ளி எறும்பாக அந்த இயக்குநர் சிக்கித் தவித்து வருவதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

சோதனை மேல் சோதனை

சோதனை மேல் சோதனை

இதுவரை எந்த இயக்குநருக்கும் இப்படியொரு ட்ரோலோ அல்லது சோதனையோ வந்ததில்லை. அந்த அளவுக்கு இந்த காமெடி இயக்குநர் சமீபத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். டாப் நடிகரை வைத்து ஃபிளாப் கொடுத்த இயக்குநரை கூட நெட்டிசன்கள் இந்த அளவுக்கு ட்ரோல் செய்யாமல், அடுத்த படத்தின் மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கின்றனர். ஆனால், இந்த இயக்குநர் எடுக்கப் போகும் அடுத்த படத்தையும் இப்பவே ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

பெரிய தலைவலி

பெரிய தலைவலி

உச்ச நடிகரின் போட்டி மனப்பான்மை மற்றும் அவரது தலையீடு காரணமாக அவசர அவசரமாக படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதுவே தற்போது இயக்குநருக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது. சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு எல்லாவிதமான கதைகளும் டைட்டிலை வைத்து வெளியாகி விட்டால், அதில் ஏதாவது ஒன்றுக்கு தொடர்புடைய கதை தனது படமாக இருக்கும் பட்சத்தில் வெளியான பின்னர் காப்பி என்கிற முத்திரை குத்தப்படுமே என்றும் யோசித்து வருகிறாராம்.

மாஸ் ஹீரோ ரசிகர்கள்

மாஸ் ஹீரோ ரசிகர்கள்

தங்களது நாயகனுக்கு மொக்கைப் படத்தை கொடுத்து விட்டு உச்ச நட்சத்திரத்திற்கு மட்டும் உருப்படியான படத்தை கொடுத்தால் அவ்வளவு தான் என மாஸ் ஹீரோவின் ரசிகர்கள் வெளிப்படையாகவே மிரட்டி வருவதாகவும் புலம்பி வருகிறார் அந்த இயக்குநர். இத்தனை பிரச்சனைகளையும் சரி கட்டி சரியான மனநிலையுடன் படம் இயக்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால் அதிரடி முடிவு ஒன்றையும் அவர் எடுத்து இருக்கிறாராம்.

அதை பார்க்கக் கூடாது

அதை பார்க்கக் கூடாது

படத்தை எடுத்து முடிக்கும் வரை சோஷியல் மீடியா பக்கமே தலை காட்டக் கூடாது என்றும், யார் என்ன சொன்னாலும், நம்ம வேலையில் நாம சின்சியரா இருந்தா நிச்சயம் பழையபடி கம்பேக் கொடுத்து விடலாம் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் இயக்குநர் என்றும் தனது ஸ்மார்ட் போனையே தூக்கி எறிந்து விட்டு, பழைய மாடல் மொபைல் போனை மட்டும் வைத்துக் கொண்டு திரைக்கதையை வலுவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளாராம் இயக்குநர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X