இனிமே அந்த ஹீரோயின் வேண்டாம்.. மனைவி போட்ட கண்டிஷன்.. தலையாட்டிய தமாஸ் நடிகர்?
சென்னை: தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த அந்த நடிகையுடன் இனிமேல் நடிக்கக் கூடாது என தமாஸ் நடிகருக்கு அவரது மனைவி கண்டிஷன் போட்டதாக பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சினிமாவில் தனக்கான தனி இடத்தை ரொம்பவே போராடி கஷ்டப்பட்டு உருவாக்கி உள்ளார் அந்த தமாஸ் நடிகர்.
ஆக்ஷன் ஹீரோவாக மாற முயற்சித்து வரும் நடிகர் பாக்ஸ் ஆபிஸிலும் தனி முத்திரையை சமீப காலமாக ஸ்ட்ராங்காக பதித்துள்ளார்.

சூப்பர் ஜோடி
அவார்டு நடிகையுடன் தமாஸ் நடிகர் ஜோடி போட்டு நடித்த படங்கள் வேற லெவலில் ஹிட் அடித்தன. தொடர்ந்து சில படங்களில் அந்த நடிகருடன் ஜோடி போட்டு நடித்து வந்த நிலையில், அப்போதும் மனைவி இதுக்கு மேல இந்த நடிகையுடன் இணைந்து நடிக்க வேண்டாம் என கண்டிஷன் போட்டதுமே ஓகே சொன்ன தமாஸ் நடிகர் அந்த நடிகையை கழட்டி விட்டு புதுமுக நடிகைகளுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார் என கூறுகின்றனர்.

ஹிட் ஹீரோயின்
இந்நிலையில், சமீபத்தில் தமாஸ் நடிகருக்கு அடுத்தடுத்து சூப்பர் ஹிட் பாக்ஸ் ஆபிஸ் படங்கள் புதிய நடிகையுடன் இணைந்து நடித்ததில் அதிர்ஷ்டவசமாக கிடைக்க அவருடன் ஜோடி போட்டு நடிக்க நடிகர் ரொம்பவே ஆர்வம் காட்டி வரும் தகவலை மனைவியின் ஸ்பை அவரது காதுக்கு அனுப்பி விட்டார்.

மனைவி கண்டிஷன்
கணவரின் போக்கை கண்டு கொண்ட மனைவி இனிமேல் அந்த இளம் நடிகையுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டாம் என சமீபத்தில் கணவருக்கு கண்டிஷன் போட்டதாகவும், அதன் காரணமாகவே அந்த நடிகையுடன் இனிமேல் இணைந்து நடிக்க வேண்டாம் என முடிவு பண்ண தமாஸ் நடிகர் புதுமுக நடிகைகளுடன் நடிக்க ஒப்பந்தம் செய்து வருகிறாராம்.

பிடிக்காத நடிகருடன்
தமாஸ் நடிகர் கழட்டி விட்ட செய்தியை அறிந்ததுமே அழுது தவித்துக் கொண்டிருந்த அந்த பிரபல நடிகர் நடிகையை தனது அடுத்த படத்துக்கு புக் செய்து நடிக்க வைத்து வருகிறாராம். பிடிக்காத நடிகருடன் அந்த நடிகை ஜோடி போட்டு நடித்து வருவதை அறிந்த நடிகர் நல்ல வேளை அவரை வேண்டாம் என்று ஒதுக்கியது என புரிந்து கொண்டாராம். ஏற்கனவே அவார்டு நடிகையை தமாஸ் நடிகர் ஒதுக்கியதுமே அந்த பிரபல நடிகர் தனக்கு ஜோடியாக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











