இந்த படத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.. மாஸ் ஹீரோவிடம் சான்ஸ் கேட்டு கெஞ்சிய காமெடி நடிகர்?

By Staff

சென்னை: காமெடி நடிகராக இருந்து ஹீரோவானா அந்த பிரபல நடிகர் தொடர்ந்து படங்கள் சொதப்பி வருவதால் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளாராம். அவருக்கு முன்பும் அவருக்கு பின்பும் காமெடியில் கலக்கிய பலரும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், ரொம்பவே மனம் உடைந்து போய் விட்டார் அந்த நடிகர் என்கின்றனர்.

சிரிப்பாக பேசி மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் அந்த நடிகர் மனம் விட்டு சிரிச்சே பல வருடங்கள் ஆவதாக உடன் இருப்பவர்களே கவலைப்பட்டு வருகின்றனர்.

Comedy Hero begging comedian chance with Popular hero talks trending?

கதையம்சம் கொண்ட படங்களை இயக்கும் இயக்குநர்களிடம் கெஞ்சியும் எந்தவொரு பலனும் கிடைக்காத நிலையில், மீண்டும் பழையபடி காமெடியனாக பல்டி அடித்து விடலாம் என்கிற முடிவுக்கே நடிகர் சமீப காலமாக சிந்தித்து வருவதாக கூறுகின்றனர்.

மிஸ்ஸான டாப் நடிகர் படம்: தனது மாற்றம் குறித்து அந்த இயக்குநரிடம் நடிகர் பேசிய நிலையில் தான் அந்த டாப் ஹீரோ படத்திலேயே இவரை கமிட் செய்திருந்தார் அந்த இயக்குநர். ஆனால், இயக்குநரையே அந்த டாப் நடிகர் அதிரடியாக கழட்டி விட்ட நிலையில், இறங்கி வந்தும் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லையே என காமெடி நடிகர் ரொம்பவே ஃபீல் செய்து விட்டாராம்.

பழைய நண்பர்களிடம் முறையிடல்: நடிச்சா இனிமே ஹீரோவாதான் நடிப்பேன் என கெத்துக் காட்டி சென்ற நடிகருக்கு சொந்த தயாரிப்பில் சில படங்களை தயாரித்தது தான் கையை பயங்கரமாக கடித்து விட்டதாம்.

அதிலிருந்து மீண்டு எந்திரிக்கவே முடியாத சூழலில் தான் தற்போது பழைய நண்பர்களிடம் தொலைபேசியிலும் நேரடியாக சென்றும் பேசி படங்களில் காமெடியனாக நடிக்க ரெடி என பேசி வருகிறாராம்.

Comedy Hero begging comedian chance with Popular hero talks trending?

மாஸ் நடிகரிடம் மனு: இதில், லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், டாப் நடிகர் படத்தில் மிஸ்ஸான வாய்ப்பை சரி கட்ட மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் தனக்கு ஒரு ரோல் கிடைக்குமா? என நேரடியாக மாஸ் நடிகரிடமே மனு போட்டு விட்டாராம் அந்த காமெடி நடிகர்.

இதுவரை இப்படி கேட்டதில்லையே என நினைத்த மாஸ் நடிகர் வேறுவகையில் உதவ வேண்டும் என்றாலும் சொல்லு நண்பா உதவுகிறேன் என நம்பிக்கை கொடுத்திருப்பதாக கூறுகின்றனர். சில தயாரிப்பாளர்களிடமும் இயக்குநர்களிடமும் மாஸ் நடிகரே காமெடி நடிகருக்காக பேச ரெடியாக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X