தமாஸ் நடிகருக்கு விருப்பமே இல்லையாம்.. அரசியல் வாரிசு பண்ற வேலை தானாம்.. மோதலுக்கு முக்கிய காரணம்?

By Staff

சென்னை: நண்பர்களாக இருந்தவர்கள் எல்லாம் திடீரென மாஸ் நடிகருக்கு பகைவர்களாக மாறும் சூழல் உருவாகி இருக்கிறது. அவர் கொடுத்த குச்சியை வைத்தே அவரது கண்ணை நோண்டுவதற்கான திட்டங்கள் நடைபெறுவதாக கோலிவுட்டில் பரபரப்பான பேச்சுவார்த்தைகள் நடக்க முக்கிய காரணமே சினிமாவில் கலந்து நிற்கும் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி தான் என்கின்றனர்.

படத்தை வெகு விரைவாக முடித்தாலும் மாஸ் நடிகர் தனக்குத் தேவையான அரசியல் ஆதாயத்திற்காக படக்குழுவிடம் சொல்லி அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்து விட்டதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

Comedy hero forced to do clash with Big hero due to political game

இந்நிலையில், அதே அரசியல் ஆதாயத்திற்காக அந்த அரசியல் வாரிசு போட்டியாக தமாஸ் நடிகர் படத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர்.

ஏகப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள்: சினிமாவை விட்டு சென்றாலும், ஒட்டுமொத்த சினிமாவையும் தனது டீமை வைத்தே கட்டுப்படுத்தி வருகிறார் அந்த அரசியல் வாரிசு என கோடம்பாக்கத்தில் பரவலான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஒரு சில குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே கோலிவுட்டில் படங்களை தயாரிப்பதும் வெளியிடுவதுமாக காலம் மாறிப்போயுள்ளது. அதன் காரணமே முன்னணி நடிகர்கள் சில பக்கத்து மாநில தயாரிப்பு நிறுவனங்களை இங்கே களமிறக்கி வருவதாகவும் கூறுகின்றனர்.

மோத வேண்டிய கட்டாயம்: தமாஸ் நடிகர் தனது கடுமையான உழைப்பால் அடுத்த மாஸ் நடிகராக உயர்ந்து வரும் நிலையில், அவரை வைத்தே மாஸ் நடிகருக்கு வேட்டு வைக்க அந்த அரசியல் பிரபலம் முடிவு செய்து மோத வேண்டிய கட்டாயத்துக்கு அவரை ஃபோர்ஸ் பண்ணுவதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

விருப்பமே இல்லை: ஆனால், தமாஸ் நடிகரை பொறுத்தவரையில் இந்த மோதலில் அவருக்கு கொஞ்சம் கூட உடன்பாடே இல்லையாம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் மற்றும் பெரிய தலைகள் முடிவு செய்யும் போது தனக்கு வேறு ஆப்ஷன் இல்லையே என்பதால் என்ன பண்ணுவது என்றே தெரியாமல் மெளனம் காத்து வருவதாக கூறுகின்றனர். படப்பிடிப்பை சீக்கிரம் முடித்து இயக்குநர் இந்த படத்தையும் இந்த ஆண்டே கொடுக்க நினைத்தாலும், அதுவும் அடுத்த ஆண்டு தான் வரும் என்பது முடிவு செய்யப்பட்டு இருப்பதில் தான் ரியல் அரசியல் கேம் நடப்பதாக கூறுகின்றனர்.

யாருக்கு லாபம்?: இந்த பெரிய மோதல் காரணமாக யாருக்கு லாபம் ஏற்படும்? யாருக்கு நஷ்டம் ஏற்படும் என்பது அந்த அந்த படங்களின் தரத்தை வைத்து தான் முடிவு செய்யப்படும் என்கின்றனர். கண்டிப்பாக மிகப்பெரிய வசூலை 2 படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் செய்வது கஷ்டம் தான் என்றும் பெரிய ஹாலிடே என்பதால் முடிவில் யார் வெல்வார் என்பதை படத்தின் தரம் தான் முடிவு செய்யும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X